நிலக்கரி இறக்குமதி செய்த செலவில், தமிழக மின் பகிர்மான கழகத்திற்கு ஆயிரத்து 559 கோடி ரூபாய் இழப்பு
பதிவு : ஜூலை 12, 2018, 07:28 AM
நிலக்கரி இறக்குமதி செய்த செலவில், தமிழக மின் பகிர்மான கழகத்திற்கு ஆயிரத்து 559 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய தணிக்கைத் துறை அறிக்கை தெரிவிக்கிறது.
இறக்குமதி செய்வதில் சிறந்த நடைமுறைகள் கையாளப்படாததால்  சிறு ஏலதாரர்கள் போட்டியில் பங்கேற்க முடியவில்லை என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், இணையம் மூலம் நடக்கும் ஏல முறையிலும் சிறந்த நடைமுறைகளை டான்ஜெட்கோ பின்பற்றவில்லை என கூறப்பட்டுள்ளது.  

நிலக்கரி இறக்குமதி செய்யப்படும் தேதியன்று இருக்கும் விலையை நிர்ணயம் செய்யாமல், ஒப்பந்தப்புள்ளி திறக்கப்படும் தேதியன்று இருக்கும் விலையை நிர்ணயம் செய்ததால், 2013 அக்டோபர் முதல் 2016 பிப்ரவரி வரை, 746 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நிலக்கரியின் தரம் குறித்த தரச்சான்றிதழுக்கும், சுங்கத்துறையினரால் வழங்கப்பட்ட சோதனை முடிவுகளுக்கும் இடையே அதிக வேறுபாடு இருந்தது. இதனால் 813 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தணிக்கை துறை அறிக்கை தெரிவிக்கிறது.


நிலக்கரி இறக்குமதியில் 1500 கோடி ரூபாய் நஷ்டம் குறித்து சி.பி.ஐ. விசாரணை தேவை - ஸ்டாலின் கோரிக்கை.தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து அரசுக்கு ஆயிரத்து 500 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியது குறித்து உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2016 - 17 ஆம் ஆண்டிற்கான சி.ஏ.ஜி அறிக்கையில் அதிமுக ஆட்சி நிர்வாகம் குறித்து வெளிவந்துள்ள தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் அக்டோபர் 2013 முதல் பிப்ரவரி 2016 வரை நிலக்கரி இறக்குமதி செய்ததில் மட்டும் ஆயிரத்து 599.81 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

நிலக்கரி இறக்குமதியில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் ஆதாரபூர்வமாக இன்றைக்கு தெரிய வந்திருப்பதாக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார். தற்போது வெளியாகி உள்ள சி.ஏ.ஜி அறிக்கை அதிமுக அரசின் இழப்புகளின் தொகுப்பாக உள்ளதாகவும், அமைச்சர்கள் அனைத்து துறைகளிலும் படு தோல்வியடைந்து விட்டார்கள் என்பதை பட்டவர்த்தனமாக வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மேலும், தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து ஆயிரத்து 500 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியதில் உள்ள முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ஸ்டாலின் விடுத்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார். இல்லையென்றால் திமுக சார்பில் வழக்கு தொடரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

நிலக்கரி இறக்குமதியால் ஏற்பட்ட நஷ்டம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - திமுக செயல்தலைவர் ஸ்டாலின்

தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து அரசுக்கு ஆயிரத்து 500 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியது குறித்து உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

81 views

பிற செய்திகள்

அதிதி மேனனுக்கும் எனக்கும் திருமணம் நடந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன - நடிகர் அபி சரவணன்

நடிகர் அபி சரவணன் மீது அவரின் மனைவி அதிதி மேனன் பல்வேறு புகார்களை முன்வைத்துள்ள நிலையில் சென்னையில் அதுகுறித்து அபி சரவணன் விளக்கமளித்தார்.

39 views

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய கோரிக்கை

மார்ச் 9 அன்று 7 நகரங்களில் மனித சங்கிலிப் போராட்டம்

30 views

கொத்தடிமைகளாக இருந்த 11 பேர் மீட்பு

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே செங்கல்சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 11 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

48 views

தடை செய்யப்பட்ட 4 டன் குட்கா பறிமுதல்

பூந்தமல்லியில் தடை செய்யப்பட்ட 4 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

12 views

தலாய் லாமாவின் சொற்பொழிவு நிகழ்ச்சி

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரம் பேர் பங்கேற்பு

20 views

கிராம சபை கூட்டத்தில் அதிமுக கூட்டணி குறித்து ஸ்டாலின் கடுமையான விமர்சனம்

பயத்தின் காரணமாகவே, பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்திருப்பதாக, திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

33 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.