டி.என்.பி.எல் 3வது சீசன் கிரிக்கெட் தொடர் : நெல்லையில் நாளை கோலாகல துவக்கம்
பதிவு : ஜூலை 10, 2018, 08:21 PM
தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி, நெல்லையில் நாளை, புதன் கிழமை துவங்குகிறது. துவக்க ஆட்டத்தில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை, ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி எதிர்கொள்கிறது.
"நம்ம ஊரு கிரிக்கெட்" என அழைக்கப்படும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் 3 - வது ஆண்டு கிரிக்கெட் போட்டி,  நெல்லை, திண்டுக்கல் மற்றும் சென்னை என
3 நகரங்களில் நடைபெறுகிறது.  

நெல்லையில், நாளை துவங்கும் முதல் நாள் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.

தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியில் முதன்முறையாக வெளி மாநில வீரர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, தனது முதல் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸை, சென்னையில் வருகிற 14- ம் தேதி சந்திக்கிறது.

8 அணிகள் மோதும் இந்த போட்டியில், ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா 1 போட்டியில் மோத வேண்டும். லீக் முடிவில், புள்ளிகள் அடிப்படையில், முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள், "பிளே ஆப் " சுற்றுக்கு தகுதி பெறும்.

லீக் போட்டிகள், ஆகஸ்ட் 5- ம் தேதி முடிவடைந்ததும், "பிளே ஆப்" சுற்று, ஆகஸ்ட் 7 - ம் தேதி துவங்கும். தகுதி சுற்று ஆட்டம் நெல்லையிலும், வெளியேற்றுதல் மற்றும் 2 - வது தகுதி சுற்று ஆட்டங்கள் திண்டுக்கல்லிலும் நடைபெறும். 

சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்? என்பதை முடிவு செய்யும் இறுதிப்போட்டி, ஆகஸ்ட் 12 - ம் தேதி சென்னை- சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டரங்கில் நடைபெறும்  என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

காவலரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர் கைது

சென்னையில் காவலரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

779 views

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

1664 views

பிற செய்திகள்

ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்த நபர்..!

நவிமும்பை அடுத்த பன்வெல் ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் ஏற முயன்ற போது, தடுமாறி கீழே விழுந்த இளைஞரைக் காப்பாற்றிய ரயில்வே காவலருக்கு பாராட்டு குவிந்து வருகிறது

130 views

பாமக மட்டுமே மதுக்கடைகளை மூடும் - அன்புமணி ராமதாஸ்

"எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்தில் மதுக்கடைகளை மூடாது"

69 views

பாஜக பக்கம் தாவுகிறாரா டி.ராஜேந்தர்..?

அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் அவற்றின் நோக்கத்தில் இருந்தும், லட்சியங்களில் இருந்தும் விலகிச்செல்வதாக டி.ராஜேந்தர் குற்றச்சாட்டு

413 views

கல்வி, மருத்துவத்தை இலவசமாக்க வேண்டும் - வைரமுத்து

கல்வி மற்றும் மருத்துவத்தை இலவசமாக்கினால் தான், இந்தியா, வல்லரசு நாடாக மாற முடியும் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

79 views

வங்கக் கடலில் 60 கி.மீ வேகத்துடன் காற்று வீசும்

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

62 views

செல்போன்களை கொள்ளையடிக்கும் 'லிப்ட் கொள்ளையர்கள்'..!

சென்னையில் செல்போன்களை கொள்ளையடிக்கும் லிப்ட் கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

1605 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.