ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் கொட்டும் நீர் - பயணிகள் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் தடை
பதிவு : ஜூலை 10, 2018, 05:47 PM
தர்மபுரி மாவட்டம் ஓகேனக்கல் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது.
ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் கொட்டும் நீர் 

தர்மபுரி மாவட்டம் ஓகேனக்கல் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து கபினி அணையில் இருந்து விநாடிக்கு 38 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே,  ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் குளிக்கவும், பரிசல் சவாரிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவ மழை தீவிரம் - கூழாங்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்குகிறது. இதன் காரணமாக கோவை மாவட்டம் வால்பாறையில் இடைவிடாது மழை பெய்து கொண்டிருக்கிறது. கூழாங்கல் உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அங்குள்ள சோலையார் அணை முழுக்கொள்ளளவான162 புள்ளி ஏழு இரண்டு அடியை எட்டியுள்ளது. இதனை அடுத்த, அந்த அணையில் இருந்து பரம்பிக்குளம் அணைக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

பஞ்சலிங்க அருவியில் வெள்ள பெருக்கு - அருவியில் குளிக்க பொதுமக்களுக்கு தடை

உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.

744 views

கனமழையால் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் - கழிவுநீர் கலந்து வருவதால் விவசாயிகள் கலக்கம்

ராசிபுரம் அருகே திருமணிமுத்தாறில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் கழிவுநீர் கலந்து வருவதால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

553 views

உத்தரகாண்டின் பித்தோரகார் மாவட்டத்தில் கரை புரண்டு ஓடும் வெள்ளம் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

உத்தரகாண்டின் பித்தோரகார் மாவட்டத்தில் உள்ள முன்ஸியாரி கிராமத்தில் தொடர் கன மழை பெய்து வருகிறது.

13 views

தொடர்மழை - வெள்ளக்காடாக காட்சியளிக்கும் அசாம்

தொடர்மழை - வெள்ளக்காடாக காட்சியளிக்கும் அசாம்

25 views

பிற செய்திகள்

ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்த நபர்..!

நவிமும்பை அடுத்த பன்வெல் ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் ஏற முயன்ற போது, தடுமாறி கீழே விழுந்த இளைஞரைக் காப்பாற்றிய ரயில்வே காவலருக்கு பாராட்டு குவிந்து வருகிறது

93 views

பாமக மட்டுமே மதுக்கடைகளை மூடும் - அன்புமணி ராமதாஸ்

"எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்தில் மதுக்கடைகளை மூடாது"

64 views

பாஜக பக்கம் தாவுகிறாரா டி.ராஜேந்தர்..?

அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் அவற்றின் நோக்கத்தில் இருந்தும், லட்சியங்களில் இருந்தும் விலகிச்செல்வதாக டி.ராஜேந்தர் குற்றச்சாட்டு

401 views

கல்வி, மருத்துவத்தை இலவசமாக்க வேண்டும் - வைரமுத்து

கல்வி மற்றும் மருத்துவத்தை இலவசமாக்கினால் தான், இந்தியா, வல்லரசு நாடாக மாற முடியும் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

76 views

வங்கக் கடலில் 60 கி.மீ வேகத்துடன் காற்று வீசும்

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

62 views

செல்போன்களை கொள்ளையடிக்கும் 'லிப்ட் கொள்ளையர்கள்'..!

சென்னையில் செல்போன்களை கொள்ளையடிக்கும் லிப்ட் கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

1586 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.