முதல்முறையாக வடகொரிய அதிபர் - அமெரிக்க அதிபர் சந்திப்பு
பதிவு: ஜூன் 12, 2018, 08:03 AM
மாற்றம்: ஜூன் 12, 2018, 08:06 AM
உலகமே உற்றுநோக்கிய ஒரு வரலாற்று சந்திப்பு சிங்கப்பூர் தீவில் நடைபெற்றது
அடுத்து என்ன நடக்குமோ என்ற நிலையில் உலகமே கவலையுடன் விவாதித்து கொண்டிருந்த வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே, எதிர்பார்த்து காத்திருந்த முக்கிய சந்திப்பு நடைபெற்றது.  

அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், இடையிலான சந்திப்பு இந்திய நேரப்படி, இன்று காலை ஆறரை மணியளவில் சிங்கப்பூரின் சென்டோசா தீவில் துவங்கியது. இங்குள்ள கோபல்லா என்ற நட்சத்திர ஹோட்டலில் இரு தலைவர்களும் சந்தித்து பேசினர்.  

பேச்சுவார்த்தை நடைபெறும் ஹோட்டலுக்கு முதலில் வந்தது வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன். 

கிம் ஜாங் உன் வந்த 5 நிமிடங்களில் அமெரிக்க அதிபர் டிரம்ப், வந்தடைந்தார். 

முன்னதாகவே சிங்கப்பூருக்க வந்து விட்ட கிம் ஜாங் உன், நிகழ்ச்சிகளை சிங்கப்பூர் அரசு படு ரகசியமாக வைத்திருந்தது. அவர் தங்கிய இடம், சென்று வந்த இடங்கள் என அனைத்துமே, சஸ்பென்ஸ்...

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப்பும், பேச்சுவார்த்தைக்காக சிங்கப்பூரில் கால் பதித்தார்.

நேற்று மதியம், அமெரிக்க அதிபருக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ சியங் ஹூன், மதிய விருந்து அளித்தார். அந்த விருந்தில் டிரம்புக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. 

டிரம்பின், பிறந்தநாளை அங்கே கொண்டாட சிங்கப்பூர் பிரதமர் ஏற்பாடு செய்திருந்தார். மதிய விருந்தில் வைக்கப்பட்டிருந்த பிறந்தநாள் கேக்கை வெட்டினார் டிரம்ப். 

இந்நிலையில், உலகமே எதிர்ப்பார்த்த அந்த சந்திப்பு இன்று காலை ஆறு முப்பது மணிக்கு சென்டோசா தீவில் தொடங்கியது. இருவரும், கைகுலுக்க உலகெங்கிலும் இருந்து வந்திருந்த ஊடகங்களின் கேமிராக்கள் சந்திப்பை உள்வாங்கியது. 

வடகொரிய அதிபர் உடன் தமக்கு புத்தம் புதிய ஒரு நல்லுறவு பூத்திருப்பதாக, சந்திப்பு பற்றி பெருமிதம் கொண்டார் டிரம்ப். இன்னொரு பக்கம், பல்வேறு தடைகளை தாண்டி, இந்த சந்திப்பு நடைபெறுவதாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

நாடு முழுவதும் நாளை முதல் 75 லட்சம் லாரிகள் ஓடாது என அறிவிப்பு

நாடு முழுவதும் நாளை முதல் 75 லட்சம் லாரிகள் ஓடாது என அறிவிப்பு

6456 views

மாணவி பிரதீபா தற்கொலை செய்தது மிகப்பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது - பொன்.ராதாகிருஷ்ணன்

நீட் தேர்வு தோல்வியால் மாணவி பிரதீபா தற்கொலை செய்தது மிகப்பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

502 views

கேள்விகளுக்கு மனசாட்சிபடி பதில் அளித்தேன் - நமது அம்மா நாளிதழ் ஆசிரியர்

கேள்விகளுக்கு மனசாட்சிபடி பதில் அளித்தேன் - நமது அம்மா நாளிதழ் ஆசிரியர்

438 views

கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கு : ஜம்மு-காஷ்மீர் அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கு : ஜம்மு-காஷ்மீர் அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

130 views

பிற செய்திகள்

"ஸ்டெர்லைட் ஆலையை மூட சட்டம் இயற்ற வேண்டும்" - திருமாவளவன்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்

64 views

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவ ஆராய்ச்சி மையமாக உருவாகும் - அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை அமைச்சர்கள் இன்று ஆய்வு செய்தனர்.

75 views

ஸ்டாலினுக்கும், துரைமுருகனுக்கும் இடையே திமுகவில் அதிகார போட்டி - அமைச்சர் ஜெயக்குமார்

ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழகத்தில் இனி இடமில்லை - அமைச்சர் ஜெயக்குமார்

180 views

குட்கா வழக்கில் சிக்கிய மாதவ்ராவுக்கு உதவி செய்த அதிகாரிகள் யார், யார்? - சிபிஐ அதிகாரிகள் விசாரணை.

குட்கா வழக்கில் சிக்கிய மாதவ்ராவுக்கு உதவி செய்த அதிகாரிகள் யார், யார்? - தமிழக உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை.

27 views

"அதிமுக அரசுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை" - ஸ்டாலின்

அதிமுக அரசுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை என்றும் வரும் தேர்தலில் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

45 views

"அரசியலில் என்னுடைய பாதையை நானே முடிவு செய்வேன்" - கமல்ஹாசன்

காங்கிரஸ் தலைவர்களுடன் கமல் சந்திப்பு -"மரியாதை நிமித்தமானது" என விளக்கம்

347 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.