மீண்டும் தள்ளுபடி.. உச்சநீதிமன்றம் அதிரடி

x

தொலை தொடர்பு நிறுவனங்கள் லைசன்ஸ் கட்டணமாக 92 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசுக்கு செலுத்த வேண்டியிருந்தது. இதை எதிர்த்து தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் 2019ல் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து செய்யப்பட்ட மறுஆய்வு மனுக்கள் 2021ல் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த தீர்ப்பை சீராய்வு செய்யக் கோரி தொலை தொடர்பு நிறுவனங்கள், மனு தாக்கல் செய்தன. 2019 தீர்ப்பில் எவ்வித தவறும் இல்லை, எனவே சீராய்வு மனுக்களை விசாரிக்க வேண்டிய முகாந்திரம் இல்லை என்றும் தெரிவித்து உச்சநீதிமன்றம் இதை தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்