சீன உளவு கப்பல் வருகை... | இந்தியாவுக்காக வெளியுறவு கொள்கையை மாற்ற முடியாது..! | இலங்கை அதிரடி அறிவிப்பு

சீனாவை சேர்ந்த உளவு கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வர இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது...
x
  • சீனாவை சேர்ந்த உளவு கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வர இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.

  • இதனால் தென்னிந்தியாவின் உளவு பாதிக்கப்படும் என இந்திய அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.

  • இந்த நிலையில் சீன உளவு கப்பல் விவகாரத்தில் இந்தியாவின் எதிர்ப்பை ஏற்று கொள்ள முடியாது என இலங்கை எம்பி சர்த் வீரசேகர் தெரிவித்துள்ளார்.

  • இந்தியா மற்றும் அமெரிக்காவின் தேவைக்காக இலங்கையின் வெளிவிவகார கொள்கையை மாற்றிக் கொள்ள முடியாது என்ற அவர், சீனா இந்தியாவை உளவு பார்க்க அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தருகிறது என கூறுவது அடிப்படை ஆதாரமற்றது என்றார்.

  • இந்தியாவை கடல் பரப்பில் இருந்த வாறே சீனா உளவு பார்க்க முடியும் என்றும், அதற்காக அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வர வேண்டிய அவசியம் இல்லை என்றும் சர்த் வீரசேகர் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்