நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு - நடிகர் திலீப் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு

நடிகையை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் விசாரணை அதிகாரிகளை கொல்ல சதித் திட்டம் தீட்டிய வழக்கில் நடிகர் திலீப்பை கைது செய்ய கேரளா உயர்நீதிமன்றம் வரும் புதன்கிழமை வரை தடை விதித்துள்ளது.
x
நடிகையை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் விசாரணை அதிகாரிகளை கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக நடிகர் திலீப் உள்ளிட்ட 6 பேர் மீது  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் திலீப் உட்பட 4 பேர் கேரளா உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு  தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், திலீப் உள்ளிட்ட 6 பேரிடம் 3 நாட்கள் விசாரணை நடத்த அனுமதி அளித்தது. ஆனால் அவர்களை கைது செய்யக்கூடாது என தெரிவித்திருந்தது. இதனையடுத்து 6 பேரிடமும் 33 மணி நேரம் கொச்சி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதனையடுத்து இன்று வழக்கு விசாரணை வந்தபோது விசாரணை அறிக்கையை குற்றப்பிரிவு போலீசார் சீலிடப்பட்ட உறையில் சமர்ப்பித்தனர். வழக்கு விசாரணையை புதன்கிழமை வரை ஒத்திவைத்த நீதிபதி அதுவரை நடிகர் திலீப்பை கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்