இளம்பெண்ணை வன்கொடுமை செய்து மொட்டை அடித்த சம்பவம் - ஆதங்கத்தை வெளிப்படுத்திய முதலமைச்சர்

டெல்லியில் 20 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து மொட்டை அடித்து, செருப்பு மாலை அணிவித்து முகத்தில் கருப்பு பொடியை பூசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
x
கஸ்தூரிபா நகரை சேர்ந்த இளம்பெண்ணை சட்டவிரோத மது விற்பனையாளர்கள் சிலர், பாலியல் வன்கொடுமை செய்ததுடன் மொட்டை அடித்து, செருப்பு மாலை அணிவித்து கொடூரத்தை அரங்கேற்றியுள்ளனர்.  

இது குறித்து தகவலறிந்த மகளிர் ஆணையம் காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

அதில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் கைது செய்வதுடன் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாருக்கு பாதுகாப்பு அளிக்கும்படி கூறப்பட்டுள்ளது.

இந்த கொடூர சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், இப்படிப்பட்ட வெட்கக்கேடான சம்பவத்தை அரங்கேற்ற குற்றவாளிகளுக்கு எப்படி தைரியம் வந்தது என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். 

மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் துணைநிலை ஆளுநர் சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் கவனம் செலுத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும், டெல்லி மக்கள் இதுபோன்ற கொடூரமான குற்றங்களையும், குற்றவாளிகளையும்  எப்போதும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என கெஜ்ரிவால் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்