69 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டாடா குழுமத்துடன் இணையும் ஏர் இந்தியா

ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமத்திடம் இன்று மத்திய அரசு ஒப்படைக்கவுள்ளது.
x
ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமத்திடம் இன்று மத்திய அரசு ஒப்படைக்கவுள்ளது. நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனத்தை ஏலத்தில் மத்திய அரசு விற்ற போது, 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு டாடா குழுமம் அதனை வாங்கியது. இன்று 69 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டாடா குழுமத்திடம் ஏர் இந்தியா நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு ஒப்படைக்கவுள்ளது. இதனை முன்னிட்டு,  மும்பையில் இருந்து டெல்லி, பெங்களூரு மற்றும் அபுதாபி ஆகிய நகரங்களுக்கு புறப்படும் நான்கு ஏர் இந்தியா விமானங்களில் மேம்பட்ட உணவு சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்