ரயில்வே தேர்வுக்கு எதிராக போராட்டம் ரயில் பெட்டிக்கு தீ வைத்த இளைஞர்கள்

ரயில்வேயில் தொழில்நுட்பம் சாராத பிரபல பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான தேர்வுக்கு எதிராக பீகாரில் 3-வது நாளாக இளைஞர்கள் போராட்டம் நடத்தினர்.
x
ரயில்வேயில் தொழில்நுட்பம் சாராத பிரபல பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான தேர்வுக்கு எதிராக பீகாரில் 3-வது நாளாக இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். 

பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்கட்ட தேர்வு முடிவு வெளியான நிலையில், பிப்ரவரி மத்தியில் 2 ஆம் கட்ட தேர்வு நடைபெறும் என ரயில்வே அறிவித்திருப்பது ஏமாற்று வேலை என குற்றம் சாட்டும் இளைஞர்கள்,
 2019-ல் வெளியிடப்பட்ட தேர்வு குறித்த அறிவிப்பாணையில் 2 ஆம் கட்ட தேர்வு நடைபெறும் என குறிப்பிடவில்லை என்றனர். ரயில்வே இதை மறுத்துள்ளது. உத்தரபிரதேசத்தில் இளைஞர்கள் போராட்டம் நடத்திய நிலையில், பீகார் மாநிலம் கயாவில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் ரயில் பெட்டிக்கு தீ வைத்தனர். 

அப்போது பெட்டியில் யாரும் இல்லாததால் பெரும் இழப்பு தவிர்க்கப்பட்டது. அம்மாநிலத்தில் பல இடங்களில் போராட்டம் நடத்தியவர்களை கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போலீசார் விரட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து தேர்வுகளை சஸ்பெண்ட் செய்வதாக ரயில்வே அறிவித்துள்ளது. மாணவர்களின் இந்த போராட்டத்திற்கு பின்னால் சில பயிற்சி மையங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்