மைனஸ் 35 டிகிரி செல்சியஸ் குளிரில் குடியரசு தினவிழா - அனல் பறக்கும் அணிவகுப்பால் அசரவைத்த வீரர்கள்

லடாக்கில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் மைனஸ் 35 டிகிரி செல்சியஸ் குளிரில் கொண்டாடிய குடியரசு தினவிழா
x
காஷ்மீர் மாநிலம் லடாக்கில் குடியரசு தினவிழா கம்பீர அணிவகுப்புடன் நடைபெற்றது. கடல் மட்டத்தில் இருந்து 15 ஆயிரம் அடி உயரத்தில், உறைபனி தளத்தில் குடியரசு தினவிழாவை இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் கொண்டாடினர். லடாக்கில் உறைபனி மீது, மைனஸ் 35 டிகிரி செல்சியஸ் குளிரில், வெள்ளைச் சீருடையில் மிடுக்கு நடைபோட்ட வீரர்கள், தேசியக் கொடி மற்றும் ஆயுதங்களுடன் வீர வணக்கம் செலுத்தினர். உறைபனி மீது இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் நடத்திய குடியரசு தினவிழா கொண்டாட்டம் பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.   

Next Story

மேலும் செய்திகள்