ரயிலில் டிக்கெட் பரிசோதகரிடம் சிக்கிய கஞ்சா கடத்தல்காரர்கள் - ஒடிசாவை சேர்ந்த மூவர் கைது
பதிவு : ஜனவரி 24, 2022, 08:18 PM
தன்பாத் - ஆலப்புழா எக்ஸ்பிரஸில் கஞ்சா கடத்திவந்தவர்களை பிடித்து டிக்கெட் பரிசோதகர் போலீசில் ஒப்படைத்தார்.
தன்பாத் - ஆலப்புழா எக்ஸ்பிரஸில் கஞ்சா கடத்திவந்தவர்களை பிடித்து டிக்கெட் பரிசோதகர் போலீசில் ஒப்படைத்தார்.


தன்பாத் - ஆலப்புழா விரைவு ரயிலில் டிக்கெட் பரிசோதகர் சதீஷ் என்பவர் பணியில் இருந்துள்ளார். அவர் ரயில்  பெட்டி எண் 6 ல் சந்தேகத்திற்கிடமாக இருந்த பைகளை சோதனையிட்டுள்ளார். அப்போது, பண்டல் பண்டலாக கஞ்சா பொட்டலங்கள்  இருப்பதைக்கண்டு போலீசாருக்கு டிக்கெட் பரிசோதகர் தகவல் தெரிவித்துள்ளார். கஞ்சா கடத்தி வந்தவர்களில், மூன்று பேரை கையும் களவுமாக பிடித்து ரயில்வே போலீசாரிடம் அவர் ஒப்படைத்தார். போலீசாரின் முதற்கட்ட  விசாரணையில் அவர்கள் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.மேலும், கடத்தல்காரர்களிடம் இருந்து 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலீசார் மூவரையும்  கைது  செய்து, தப்பியோடிய இருவர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.