"உள்ளூர் பொருட்கள் திட்டத்தை வெற்றியடைய செய்வோம்"

தூய்மை இந்தியா திட்டத்தைப்போல் உள்ளூர் பொருட்களை வாங்குவோம் திட்டத்தையும் வெற்றியடையச் செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
x
தூய்மை இந்தியா திட்டத்தைப்போல் உள்ளூர் பொருட்களை வாங்குவோம் திட்டத்தையும் வெற்றியடையச் செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

இந்தியாவில் சமூக சேவை, கல்வி, விளையாட்டு, கலை உள்ளிட்டவற்றில் சிறந்துவிளங்கும் சிறார்களுக்கும், வீரதீர செயல் புரியும் சிறார்களுக்கும் பிரதமரின் பால சக்தி புரஸ்கார் விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், 2021-22ம் ஆண்டுக்கான பால சக்தி புரஸ்கார் விருதுகளை, பல்வேறு பிரிவுகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 29 சிறார்களுக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், 75வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் முக்கியமான நேரத்தில், சிறார்கள் விருதை பெறுவதாக கூறினார்.

நேற்றைய தினம், டெல்லியில் நேதாஜியின் முப்பரிமாண சிலை திறக்கப்பட்டதற்கு பெருமிதம் தெரிவித்த மோடி, நேதாஜியின் உத்வேகத்தை அடிப்படையாக வைத்து அனைவரும் முன்னேற வேண்டும் என்றார்.

இந்திய இளைஞர்களை பெருநிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளாக காணும்போது, பெருமையாக இருப்பதாகவும்,  

முன்பு அனுமதிக்கப்படாத துறைகளில் பெண் குழந்தைகள் தற்போது சாதித்து வருவதாகவும் பிரதமர் மோடி நெகிழ்ச்சி தெரிவித்தார்.

தூய்மை இந்தியா திட்டம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததற்கு, இந்திய இளைஞர்கள் மிக முக்கிய காரணம் என பாராட்டு தெரிவித்த பிரதமர்,

உள்ளூர் பொருட்களை வாங்குவோம் திட்டத்தையும் மாபெரும் வெற்றி அடையச் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்