"122 ஆண்டுகளுக்கு பிறகு வாட்டி எடுக்கும் கடும் குளிர்"

122 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் மழையும், கடும் குளிரும் அதிகரித்துள்ளதாக டெல்லி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
x
122  ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் மழையும், கடும் குளிரும் அதிகரித்துள்ளதாக டெல்லி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தலைநகர் டெல்லி,  பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. அதோபேல் வழக்கத்திற்கு மாறாக மழைப்பொழிவும் அதிகரித்துள்ளது. ஜனவரி மாதம் தொடங்கி கடந்த 22 நாட்களில் 88 புள்ளி 2 மி.மீ மழை பதிவாகியுள்ளதாகவும்  இது 1901 ஆம் ஆண்டுக்கு பிறகு ஜனவரி மாதத்தில் பெய்த அதிக மழை பொழிவு எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குளிர்ந்த அலை காற்று நாளையுடன் முடிந்தாலும் கூட குளிர் மற்றும் மேகமூட்டத்துடன் கூடிய வானிலை அடுத்த ஓரிரு நாட்களுக்கு நிலவும் என்றும், இந்த வருடம் சற்று தாமதமாகவே குளிர் காலம் நிறைவடையும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்