"மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்" - கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தகவல்

கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை விடுமுறை அளித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.
x
கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை விடுமுறை அளித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளுடன், கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அவசர ஆலோசனை நடத்தினர். இதன் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,புதுச்சேரி மாநிலத்தில் ஏற்கனவே 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக 10,11, 12 ஆம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகளுக்கு வரும் 31 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்தார். மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தாலும் மாணவர்களுக்கு தொடர்ந்து ஆன்-லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும் என கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்