பாதிரியாருக்கு எதிரான வழக்கில் நடந்தது என்ன? | Kerala
பதிவு : ஜனவரி 15, 2022, 05:22 AM
கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாதிரியாரை நீதிமன்றம் விடுவித்துள்ள நிலையில், இந்த வழக்கின் பின்னணியை விவரிக்கும் ஒரு தொகுப்பை காணலாம்...
கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாதிரியாரை நீதிமன்றம் விடுவித்துள்ள நிலையில், இந்த வழக்கின் பின்னணியை விவரிக்கும் ஒரு தொகுப்பை காணலாம்...

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் பிஷப்பாக இருந்தவர் பாதிரியார் பிராங்கோ முலக்கல். 

இவருக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் புகார் தெரிவித்தார். 

2014ம் ஆண்டு முதல் 2016 வரையில் குருவிளங்காடு கான்வென்டில் பாதிரியார் பிராங்கோ முலக்கல் தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கன்னியாஸ்திரி கொடுத்த புகாரின்படி குருவிளங்காடு காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.

இதற்கு பாதிரியார் பிராங்கோ முலக்கல் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி வாடிகனுக்கு கடிதம் எழுதினார். அவருக்கு ஆதரவாக பிற கன்னியாஸ்திரியர்கள் கொச்சியில் உள்ள உயர்நீதிமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். 

போராட்டம் வலுப்பெற்ற நிலையில் ஜலந்தரில் இருந்து கேரளா கொண்டுவரப்பட்ட பாதிரியார் பிராங்கோ முலக்கல்லிடம் விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், கடந்த 2018 செப்டம்பர் 21 ஆம் தேதி அவரை கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட பாதிரியார் பிராங்கோ முலக்கல் ஒரு மாதத்திற்குள் ஜாமீனில் வெளிவந்த நிலையில், விசாரணையை தொடர்ந்து மேற்கொண்ட வைக்கம் டி.எஸ்.பி. சுபாஸ், கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தார். 

கடந்த 2020 ஆகஸ்ட் 7 ஆம் தேதி பாதிரியாருக்கு 2-வது முறையாக ஜாமின் வழங்கப்பட்டது, பின்னர் அவர் கைது செய்யப்படவில்லை.

இதனையடுத்து 2020 செப்டம்பர் மாதம் கோட்டயத்தில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. 

இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கியிருக்கும் நீதிமன்றம்,  குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான ஆதாரங்களை தாக்கல் செய்ய அரசு தரப்பு தவறியதாக கூறி பிராங்கோ முலக்கல்லை விடுவித்து உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக போராடிய மற்றொரு கன்னியாஸ்திரி கருத்து தெரிவிக்கையில் பணம் மற்றும் உடல் பலம் வென்றுள்ளது என வேதனை தெரிவித்துள்ளார். 

நீதிக்கான தங்களுடைய போராட்டம் தொடரும் என கூறியிருக்கும் அவர், உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் எனக் கூறியிருக்கிறார். 

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

500 views

"முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு" - அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி, கடந்த ஆட்சியில் தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

28 views

நாடு முழுவதும் படிப்படியாக குறையும் கொரோனா

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்றுதல் குறைந்துள்ளது.

12 views

இரு தரப்பினர் இடையே விரோதம்... 1000 போலீசாரின் பாதுகாப்பில் நடக்கும் விளையாட்டு

சங்கரன்கோவிலில் இருதரப்பினரிடையே பிரச்சினை நிலவி வரும் நிலையில், விளையாட்டு போட்டி நடத்துவதற்காக ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்..

10 views

பிற செய்திகள்

தங்க நகைகள் திருடு போனதாக கூறி நாடகம் - மோசடியில் ஈடுபட்ட குடும்பத்தினர்

தங்க நகைகள் திருடு போனதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்து மோசடியில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட 7 பேரை கர்நாடக மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.

2 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (24-01-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (24-01-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

15 views

PRIME TIME NEWS | தமிழக சிறுமிக்கு விருது முதல்..ஸ்மிருதி மந்தனா சிறந்த வீராங்கனை வரை..இன்று(24-01-22)

PRIME TIME NEWS | தமிழக சிறுமிக்கு விருது முதல்..ஸ்மிருதி மந்தனா சிறந்த வீராங்கனை வரை..இன்று(24-01-22)

14 views

(24/01/2022) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

(24/01/2022) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

15 views

ரயிலில் டிக்கெட் பரிசோதகரிடம் சிக்கிய கஞ்சா கடத்தல்காரர்கள் - ஒடிசாவை சேர்ந்த மூவர் கைது

தன்பாத் - ஆலப்புழா எக்ஸ்பிரஸில் கஞ்சா கடத்திவந்தவர்களை பிடித்து டிக்கெட் பரிசோதகர் போலீசில் ஒப்படைத்தார்.

10 views

5 மாநில தேர்தலில் 117 தொகுதிகளை கொண்ட மாநிலம் எது?

5 மாநில தேர்தலில் 117 தொகுதிகளை கொண்ட மாநிலம் எது?

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.