தேர்தல் பார்வையாளர்களுக்கு தலைமை தேர்தல் ஆணையர் அறிவுறுத்தல்

சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் மற்றும் வெறுப்புப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப் படுவதை தடுக்க வேண்டும் என்று தேர்தல் பார்வையாளர்களாக பணியமர்த்தப்பட உள்ளவர்களுக்கு தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா வலியுறுத்தியுள்ளார்.
தேர்தல் பார்வையாளர்களுக்கு தலைமை தேர்தல் ஆணையர் அறிவுறுத்தல்
x
சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் மற்றும் வெறுப்புப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப் படுவதை தடுக்க வேண்டும் என்று தேர்தல் பார்வையாளர்களாக பணியமர்த்தப்பட உள்ளவர்களுக்கு  தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா வலியுறுத்தியுள்ளார். 

உத்தர பிரதேசம் , உத்தரகாண்ட் , மணிப்பூர்,  கோவா,  பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தேர்தல் பார்வையாளர்களாக பணியமர்த்தப்பட உள்ள ஐஏஎஸ்,  ஐபிஎஸ் உள்ளிட்ட  அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் ஆய்வு கூட்டம் நடத்தியது. 

இந்த ஆய்வு கூட்டத்தில் சுமார் 1400 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்போது பேசிய 
தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா நேர்மையான, வெளிப்படையான, பாதுகாப்பான மற்றும் சுதந்திரமான தேர்தலை உறுதி செய்வதில் தேர்தல் பார்வையாளர்கள் கழுகுப் பார்வையுடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கொரோனா நோயாளிகள், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு  தபால் வாக்குகள் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான அனைத்து நடைமுறைகளையும் தெரிந்து வைத்திருக்கும்படி தேர்தல் பார்வையாளர்களுக்கு தலைமை தேர்தல் ஆணையர் அறிவுறுத்தினார்.

வாக்குப்பதிவு மையங்களில் மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள்,  பெண்கள் உள்ளிட்டோருக்கு குறைந்தபட்ச வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வாக்குச்சாவடி மையங்களுக்கு அடிக்கடி நேரில் சென்று ஆய்வு செய்யும்படியும் தலைமை தேர்தல் ஆணையர் அறிவுறுத்தினர்.

தேர்தல் பார்வையாளர்கள் அதிக விழிப்புடன் இருக்கும்படியும் எந்த விதமான முக்கிய நிகழ்வுகளை ஏற்பட்டாலும் அதனை உடனுக்குடன் தேர்தல் ஆணையத்திற்கு தெரியப்படுத்துமாறு தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா கேட்டு கொண்டார்

Next Story

மேலும் செய்திகள்