"பஞ்சாப் சம்பவம் - வருந்துகிறேன்" - பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி

கொரோனா பரவல் குறித்து மாநில முதலமைச்சர்களுடனான ஆலோசனை கூட்டத்தின் போது, பிரதமர் மோடியிடம் பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி வருத்தம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பஞ்சாப் சம்பவம் - வருந்துகிறேன் - பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி
x
கொரோனா பரவல் குறித்து மாநில முதலமைச்சர்களுடனான ஆலோசனை கூட்டத்தின் போது, பிரதமர் மோடியிடம் பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி வருத்தம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த சில தினங்களுக்கு முன்னர், பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறவிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சாலை மார்க்கமாக சென்றபோது 15-20 நிமிடங்கள் மேம்பாலத்தில் சிக்கிக்கொண்டார். பிரதமர் சென்ற பாதையை போராட்டக்காரர்கள் வழிமறித்து சாலை மறியல் செய்ததால் பதற்றம் ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக பஞ்சாப் மாநில அரசு கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது.  இந்நிலையில், கொரோனா பரவல் குறித்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். அதில், மோடியுடனான உரையாடலின் போது, பஞ்சாப் பயணத்தின் போது நடந்தைவைகளுக்கு தான் வருந்துவதாகவும், பிரதமர் நீண்ட ஆயுளுடன் வாழ விரும்புவதாகவும் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்