கொரோனா சூழல் மக்களின் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் பாதித்து விடக்கூடாது - பிரதமர் மோடி

தற்போதுள்ள கொரோனா சூழல் மக்களின் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் பாதித்துவிடக்கூடாது என அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா சூழல் மக்களின் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் பாதித்து விடக்கூடாது - பிரதமர் மோடி
x
தற்போதுள்ள கொரோனா சூழல் மக்களின் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் பாதித்துவிடக்கூடாது என அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். 

கொரோனா பாதிப்பு குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அதில் பேசிய அவர், உலகை அச்சுறுத்தும் ஒமிக்ரான் குறித்து மக்கள் பயப்பட தேவையில்லை என்றும் தொற்றிலிருந்து நம்மை காத்து கொள்ளக்கூடிய மிக பெரிய ஆயுதம் தடுப்பூசி என்றும் கூறினார். 

தடுப்பூசி போடுவதை அதிகப்படுத்த வேண்டும் என்றும், 
கொரோனா பரிசோதனையை மாநிலங்கள் அதிகப்படுத்த வேண்டும் எனவும் அவர்  கேட்டு கொண்டார். முடிந்த அளவு மக்களை அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளில் தீவிரம் காட்டுமாறு மாநில அரசுகளை பிரதமர் கேட்டுக்கொண்டார்.

நமது பாரம்பரியத்தில் ஒன்றான ஆயுர்வேத இயற்கை மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்படும் கசாயத்தை மக்கள் அருந்த வேண்டும் என்றும் எத்தனை உருமாறிய கொரோனா வந்தாலும் அதனை  ஒற்றுமையுடன் எதிர்கொள்ள மத்திய, மாநில அரசுகள் தயாராக இருப்பதே பொதுமக்களுக்கு மன உறுதியை அளிக்கிறது என்றும் அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்