ஒரே நாளில் 27% அதிகரித்த கொரோனா

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்றைவிட 27 சதவீதம் அதிகரித்துள்ளதோடு, இரண்டு லட்சத்தை கடந்துள்ளது
x
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்றைவிட 27 சதவீதம் அதிகரித்துள்ளதோடு, இரண்டு லட்சத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 47ஆயிரத்து 417 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றை பாதிப்பைவிட 27 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஒமிக்ரான் பாதிப்பு ஐந்தாயிரத்தை கடந்து 5,488 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 84 ஆயிரத்து 825 பேர் மீண்டுள்ள நிலையில், 380 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர். நாடு முழுவதும் 11 லட்சத்து 17 ஆயிரத்து 531 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.



Next Story

மேலும் செய்திகள்