உன்னாவ் சிறுமியின் தாய்க்கு போட்டியிட வாய்ப்பு - காங்கிரஸ் அறிவிப்பு

உத்திரபிரதேச சட்டமன்ற தேர்தலுக்காக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் உன்னாவ் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயின் பெயர் இடம்பெற்றுள்ளது.
x
உத்திரபிரதேச சட்டமன்ற தேர்தலுக்காக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் உன்னாவ் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயின் பெயர் இடம்பெற்றுள்ளது.உத்திரபிரதேச மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை காணொலி வாயிலாக பிரியங்கா காந்தி வெளியிட்டார். 125 பேர் அடங்கிய பட்டியலில் 40 சதவீதம் பெண்களுக்கும், 40 சதவீதம் இளைஞர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பட்டியலின்படி 50 பெண்கள் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றனர். குறிப்பாக உன்னாவ் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் தாய் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார். வேட்பாளர்கள் குறித்து பேசிய பிரியங்கா காந்தி, முன்னெடுப்பு அரசியலில் புதிய முயற்சி என குறிப்பிட்டார். பெண்களின் வளர்ச்சியில் காங்கிரஸ் கட்சி கவனம் செலுத்தும் என்ற பிரியங்கா காந்தி, வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு துணையாக இருப்பதாக உறுதி அளித்தார். இதேபோன்று ஹத்ராஸில் கூட்டு வன்கொடுமையால் கொலை செய்யப்பட்ட தலித் பெண்ணின் குடும்பத்திற்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க உள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்