இந்திய பாஸ்போர்ட் இருந்தால் 60 நாடுகளுக்கு செல்ல விசா தேவையில்லை..!

இந்திய பாஸ்போர்ட்டின் பலம் அதிகரித்துள்ளதால், இந்திய குடிமக்கள் தற்போது 60 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடிகிறது.
x
இந்திய பாஸ்போர்ட்டின் பலம் அதிகரித்துள்ளதால், இந்திய குடிமக்கள் தற்போது 60 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடிகிறது.

2022இன் முதல் காலாண்டிற்கான ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டு எண் வரிசையில் இந்திய பாஸ்போர்ட் 83ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

2021இல் 90ஆம் இடத்தில் இருந்த இந்திய பாஸ்போர்ட்டின் பலம் அதிகரித்துள்ளதால், 2022இல் ஏழு இடங்கள் முன்னேறியுள்ளது.

ஈரான், ஜோர்டான், பூட்டான், நேபாளம், ஆர்மீனியா, தாய்லாந்த், பொலிவியா, எதியோப்பியா உள்ளிட்ட 60 நாடுகளுக்கு இந்தியார்கள் விசா பெறாமல் செல்ல முடியும். அங்கு தரையிறங்கிய பின், விசா பெற்றுக் கொள்ளலாம்.

199 நாடுகள் கொண்ட ஹென்லே பாஸ்போர்ட் குறியீட்டு எண் வரிசையில் ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் முதல் இடத்திலும், ஜெர்மனி மற்றும் தென் கொரியா இரண்டாம் இடத்திலும் உள்ளன. 

பாகிஸ்தான் 108ஆம் இடத்திலும், சிரியா 109ஆம் இடத்திலும் உள்ளன. கடைசி இடத்தில் ஆப்கானிஸ்தான் உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்