2021இல் தங்கம் விலை 4 சதவீதம் வீழ்ச்சி - 2022இல் ஆபரண தங்கம் விலை அதிகரிக்குமா ?

2021 ஜனவரியை ஒப்பிடுகையில், 2022 ஜனவரியில் தங்கம் விலை 4 சதவீதம் குறைந்துள்ளது. தங்கம் விலை மேலும் உயர சாத்தியமுள்ளதா என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
x
2021 ஜனவரியை ஒப்பிடுகையில், 2022 ஜனவரியில் தங்கம் விலை 4 சதவீதம் குறைந்துள்ளது.  தங்கம் விலை மேலும் உயர சாத்தியமுள்ளதா என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2020 ஆகஸ்டில் சவரனுக்கு 43,334 ரூபாயை எட்டிய ஆபரண தங்கத்தின் விலை, தற்போது 35,886 ரூபாயாக குறைந்துள்ளது.

2020இல் 1.62 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. 2021இல் இது இரு மடங்காக அதிகரித்து 4.12 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

2021இல் தங்கத்தில் இருந்து பங்கு சந்தைகளுக்கு முதலீடுகள் அதிக அளவில் மாறியதால், தங்கம் விலை குறைந்து, பங்கு சந்தை உச்சமடைந்ததாக பொருளியலாளர்கள் கூறுகின்றனர். 

ஒமிக்ரான் தொற்று அதிகரிப்பதினால் ஏற்படும் நிச்சயமற்ற தன்மையினால், அடுத்த சில மாதங்களுக்கு தங்கம் விலை மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக துறை சார் நிபுணர்கள் கூறுகின்றனர். 

ஆனால் அமெரிக்க ரிசர்வ் வங்கி, வட்டி விகிதங்களை உயர்த்தினால், 2022இன் பிற்பகுதியில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளதாக HDFC செக்யூரிட்டீஸ்
நிறுவனத்தின் பண்டகங்கள் பிரிவின் பொருளியலாளர் தபன் பட்டேல் கூறுகிறார். 

தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் தொடர்ந்தாலும், 2022இல் தங்கம் இறக்குமதி மற்றும் விற்பனையளவு தொடர்ந்து அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்