2022 உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தல் களம்

403 தொகுதிகள் கொண்ட உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தல், 7 கட்டமாக பிப்ரவரியில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் அணிகள் பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
x
403 தொகுதிகள் கொண்ட உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தல், 7 கட்டமாக பிப்ரவரியில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் அணிகள் பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் வலுவான நிலையில் உள்ள பாஜக,  2017 சட்டமன்ற தேர்தலில் 39.67 சதவீத வாக்குகளை பெற்று, 312 இடங்களில் வெற்றி பெற்றது.  அதன் கூட்டணி கட்சிகள் 13 இடங்களில் வெற்றி பெற்றன.

2022 சட்டமன்ற  தேர்தலில் அப்னா தளம், நிஷாத் கட்சியுடன் கூட்டணியை தொடரும் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக, யோகி ஆதித்யநாத் முன்நிறுத்தப்பட்டுள்ளார். 

2017 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி, அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி அமைத்து, 114 இடங்களில் போட்டியிட்டு, 6.25 சதவீத வாக்குகளை பெற்று, 7 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது.

2017 வரை உத்தர பிரதேச முதல்வராக இருந்த அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி, 2017 தேர்தலில் 21.82 சதவீத வாக்குகளை பெற்று, 47 இடங்களில் வெற்றி பெற்றது.

சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி முறிந்துள்ள நிலையில், 2022 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனியாக போட்டியிடுகிறது. 40 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி அறிவித்துள்ளார்.

2022 தேர்தலில், ராஷ்ட்ரிய லோக் தளம் உள்ளிட்ட 15 சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ள சமாஜ்வாடி கட்சி, அகிலேஷ் யாதவ் தலைமையில் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது.

நான்கு முறை உத்தர பிரதேச முதல்வாரக இருந்த மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி, 2017 தேர்தலில் தனித்து போட்டியிட்டு, 22.23 சதவீத வாக்குகளை பெற்று 19 இடங்களில் வென்றது.

2022 சட்டமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி மீண்டும் தனித்து களம் இறங்கியுள்ளது.2017 சட்டமன்ற தேர்தலில் சி.பி.எம், சி.பி.ஐ உள்ளிட்ட ஆறு இடதுசாரி கட்சிகள் கூட்டணி அமைத்து 140 இடங்களில் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்தன. 2022இலும் இந்த கூட்டணி தொடர்கிறது.


Next Story

மேலும் செய்திகள்