நண்பனை காப்பாற்ற முயன்ற போது விபரீதம் - கிருஷ்ணா நதியில் மூழ்கி 5 சிறுவர்கள் பலி
பதிவு : ஜனவரி 11, 2022, 02:55 PM
ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா நதியில் குளிக்கச் சென்ற ஐந்து சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சந்திரலபாடு கிராமத்தை சேர்ந்த ஐந்து சிறுவர்கள், கிருஷ்ணா நதியில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, திடீரென நீர்வரத்து அதிகரித்ததால் ஒரு சிறுவன் நீரில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அவனை காப்பாற்றுவதற்காக தண்ணீரில் குதித்த 4 சிறுவர்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.  மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் தெரிவித்த தகவலின் பேரில் அங்கு வந்த மீட்பு குழுவினர், அஜய், சரண் ஆகிய இருவரின் உடல்களை மீட்டனர். மேலும் பாலயேசு, சன்னி,  ராகேஷ் ஆகியோரின் உடல்களை தீயணைப்பு மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் 2-வது நாளாக தேடி வருகின்றனர். ஒரே கிராமம், ஒரே பள்ளியைச் சேர்ந்த 5 சிறுவர்கள் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவத்தால் சந்திரலபாடு கிராமமக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

பிற செய்திகள்

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (20-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (20-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

13 views

#Breaking || காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

முன் ஜாமின் கோரி எம்.பி. கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீது உத்தரவு...

88 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (20.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (20.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

47 views

ரயில் கட்டணம் உயர்வு? - மத்திய ரயில்வே அமைச்சர் விளக்கம்

ரயில் கட்டணங்களை உயர்த்தும் திட்டம் இல்லை என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

25 views

கால் தடுமாறி மேடையிலிருந்து விழுந்த புலனாய்வு அதிகாரி மரணம் - பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், குடியரசு துணை தலைவரின் வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து கொண்டிருந்த புலனாய்வு அதிகாரி கால் தவறி விழுந்ததில், பரிதாபமாக உயிரிழந்தார்.

38 views

அனைத்து மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ஆலோசனை

அனைத்து மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.