பிரதமர் பாதுகாப்பு விவகாரம் "பிரிட்டனில் இருந்து மிரட்டல்" - வழக்கு தொடர்ந்தவர் பரபரப்பு குற்றச்சாட்டு

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் பிரதமர் மோடியின் பாதுகாப்புக்கு குறைபாடு ஏற்பட்டது தொடர்பாக லாயர்ஸ் வாய்ஸ் அமைப்பு பொதுநல மனு தாக்கல் செய்தது.
x
பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் பிரதமர் மோடியின் பாதுகாப்புக்கு குறைபாடு ஏற்பட்டது தொடர்பாக லாயர்ஸ் வாய்ஸ் அமைப்பு பொதுநல மனு தாக்கல் செய்தது. 

இது குறித்து விசாரித்து வந்த உச்சநீதிமன்றம், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் வழக்கை தொடர்ந்த வழக்கறிஞர் சந்தீப் சிங், தனக்கு பிரிட்டனில் இருந்து தொலைபேசியில் மிரட்டல் வந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். 

குறிப்பிட்ட தொலைபேசி உரையாடல் பதிவையும் அவர் வெளியிட்டுள்ளார். அந்த உரையாடல் பதிவில் மறுபுறம் பேசும் நபர், பஞ்சாப்பில் பிரதமரின் பாதுகாப்பு வாகனங்களை மறித்தது தாங்கள்தான் எனக் கூறியுள்ளார். 

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் மற்றும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தில் உச்சநீதிமன்றம் எதுவும் செய்யவில்லை எனக் கூறியிருக்கும் அந்த நபர்,  பஞ்சாப்பில் பிரதமர் மோடிக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்கக் கூடாது எனவும் கூறியிருக்கிறார். பிரிட்டனிலிருந்து வந்ததாக கூறப்படும் இந்த உரையாடல் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இது குறித்து உச்சநீதிமன்றம் மற்றும் டெல்லி காவல்துறையிடம், உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்