"ரயில்வே கட்டமைப்பு-பொதுமக்களுக்கு அனுமதி" - மத்திய ரயில்வே அமைச்சர் உத்தரவு

ரயில்வே மருத்துவமனைகள் மற்றும் சுகாதார கட்டமைப்புகளை பொதுமக்களும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என அனைத்து ரயில்வே மண்டலம் மற்றும் கோட்ட உயரதிகாரிகளுக்கு ரயில்வே அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
x
கொரோனா  பரவல் அதிகரித்து வருவதையடுத்து, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில்வே வாரியத் தலைவர் வி கே திரிபாதி, மற்றும் ரயில்வே  உயரதிகாரிகளுடன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, ரயில்வே மருத்துவமனை கட்டமைப்புகள், குழந்தைகள் வார்டுகளின் செயல்பாடு, ரயில்வே முன்களப் பணியாளர்களுக்கு முன்னெச்சரிக்கை தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்க பட்டது.  முகக்கவசம் அணிதல், கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்துதல் மற்றும் இதர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ரயில் நிலையங்களில் வெளியிடப்படும் அறிவிப்புகளை அதிகப்படுத்த வேண்டும் எனவும் அப்போது அறிவுறுத்தப்பட்டது. மேலும் ரயில்வே மருத்துவமனைகள் மற்றும் சுகாதார கட்டமைப்புகளை  பொதுமக்களும் பயன்படுத்த அனுமதிக்குமாறு அனைத்து ரயில்வே மண்டலம் மற்றும் கோட்டங்களில் பணியாற்றும் உயரதிகாரிகளுக்கு மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்