உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகளை மூட உத்தரவு - பேரிடர் மேலாண்மை கூட்டத்தில் முடிவு

டெல்லியில் உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகளை மூட மாநில பேரிடர் மேலாண்மை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
x
டெல்லியில் உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகளை மூட மாநில பேரிடர் மேலாண்மை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அவசரக்கூட்டம் நடைபெற்றது. அதில், துணைநிலை ஆளுநர் அனில் பைஜால், மாநில அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி, உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகள் மூடப்பட்டு உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதியளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ஒரு மண்டலத்தில் நாளொன்றுக்கு ஒரு வாரச்சந்தையை மட்டும் நடத்த அனுமதி வழங்கப்பட்டதோடு தற்போதைய சூழலில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்