"பொதுமக்கள் அதிகளவில் கூடுவது கட்டுப்படுத்தப்படும்" - ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

புதுச்சேரியில் பொங்கலையொட்டி பொது இடங்களில் மக்கள் அதிகளவில் கூடுவது கட்டுப்படுத்தப்படும் என கொரோனா தடுப்பு தொடர்பான துணைநிலை ஆளுநரின் ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
x
புதுச்சேரியில் பொங்கலையொட்டி பொது இடங்களில் மக்கள் அதிகளவில் கூடுவது கட்டுப்படுத்தப்படும் என கொரோனா தடுப்பு தொடர்பான துணைநிலை ஆளுநரின் ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கொரோனா கட்டுப்பாட்டு குழுவின் அவசர கூட்டம் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகளின் படி வார இறுதி நாட்களில் போடப்படும் ஊரடங்கு மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொங்கல் பண்டிகை கொண்டாட தடையில்லை என்றாலும் பொது இடங்களில் மக்கள் அதிகளவில் கூடுவதை தடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்