வேகமெடுக்கும் 3வது அலை - எச்சரிக்கும் ஆய்வு முடிவுகள்?
பதிவு : ஜனவரி 11, 2022, 06:40 AM
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 10 லட்சம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 30 நாட்களுக்கு முன்பு தினசரி கொரோனா பாதிப்பு ஐயாயிரத்து 326 ஆக இருந்த நிலையில், 

டிசம்பர் 29 ஆம் தேதி 33 நாட்களுக்கு பிறகு இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 10, ஆயிரத்தை கடந்தது. 

அதன் பிறகு தினசரி 20 ஆயிரம் முதல் முப்பதாயிரம் வரை அதிகரிக்க தொடங்கிய தினசரி கொரோனா பாதிப்பு, 7 மாதங்களுக்கு பிறகு கடந்த ஜனவரி  5 ஆம் தேதி ஒரு லட்சத்தை கடந்தது. 
 
தற்போது இந்தியாவில் தினசரி பாதிப்பு ஒரு லட்சத்து 79 ஆயிரமாக பதிவாகியுள்ளது. 

இரண்டாவது அலையை விட ஒமிக்ரான் பரவலால் மூன்றாவது அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில், இது குறித்து பல்வேறு ஆய்வறிக்கைகள் வெளியிடப்பட்ட வண்ணம் உள்ளன. 

பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் மற்றும் இந்திய புள்ளியியல் நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில் இந்தியாவில் ஜனவரி மாத இறுதியில் அல்லது பிப்ரவரி தொடக்கத்தில் தினசரி கொரோனா பாதிப்பு உச்சம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சமயத்தில் நாளொன்றுக்கு 10 லட்சம் பேர் வரை கொரோனா பாதிப்புக்கு ஆளாக நேரிடும் என்று அந்த ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது. 

இதைபோல் சென்னை ஐஐடி நடத்திய ஆய்வில், இந்தியாவில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதிக்குள் மூன்றாவது அலை புதிய உச்சம் பெறும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதற்கு முன்பு இரண்டாவது அலையின் போது கொரோனாவால் பரவல் 1 புள்ளி 69 ஆக இருந்த நிலையில், தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் மூலம் 4 பேர் வரை பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. 

அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள மற்றொரு ஆய்வறிக்கையில், அடுத்த மாதம் இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கொரோனா இரண்டாவது அலையை விட புதிய உச்சம் பெறும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.  

நாளொன்றுக்கு  ஐந்து லட்சம் வரை பாதிப்புகள் பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இரண்டாவது அலையின் உச்சத்தின் போது, இந்தியாவில் தினசரி பாதிப்பு நான்கு லட்சத்தை கடந்து பதிவாகி வந்தது. 

இந்நிலையில், வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டிற்கான நிறுவன இயக்குனர்  கிறிஸ்டோபர் முர்ரே வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், இந்தியாவில் 82.5 சதவீதம் பேர் எவ்வித நோய் அறிகுறியும் இல்லாமல் கொரோனா பாதிப்புக்கு ஆளாக கூடும் என்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் மற்றும் கொரோனாவுக்கு உயிரிழப்பு குறைவாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(24/02/2022) ஆயுத எழுத்து - உக்ரைன் போரும் இந்தியாவுக்கான சவால்களும்

(24/02/2022) ஆயுத எழுத்து - உக்ரைன் போரும் இந்தியாவுக்கான சவால்களும்.. சிறப்பு விருந்தினர்களாக - சாய் கிரண், பத்திரிகையாளர் // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் // மதன்குமார், ராணுவம்(ஓய்வு) // ரகுநாதன், பொருளாதார நிபுணர் // மாணவி மௌனி சுகிதா, உக்ரைன்

80 views

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

79 views

மீண்டும் மோதும் CSK Vs SRH பழி தீர்க்குமா சென்னை அணி..!

புனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.

74 views

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

60 views

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

34 views

பிற செய்திகள்

சென்னை வரும் பிரதமர் மோடி - முக்கிய ஆலோசனை

பிரதமர் மோடி சென்னை வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தினார்....

41 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (16.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (16.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

32 views

புத்த பூர்ணிமாவில் நேபாளத்திலுள்ள மகா மாயாதேவி ஆலயத்தில் பிரதமர் மோடி வழிபாடு

நேபாள நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள மகா மாயா தேவி ஆலயத்தில் பூஜை செய்து வழிபாடு நடத்தினார்.

25 views

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் தொடர்ந்து 40-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

40 views

#Breaking || நீட் தேர்வு - கால அவகாசம் நீட்டிப்பு

நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் இரண்டாவது முறையாக நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

16 views

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (16-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (16-05-2022) | Morning Headlines | Thanthi TV

35 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.