பணத்துக்காக மனைவிகளை கைமாற்றும் பகீர் கும்பல் - 3000க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டதாக வெளியான தகவல்

கேரளாவில் பணத்துக்காக மனைவிகளை கைமாற்றும் கும்பல் இணையத்தில் குரூப் வைத்துக் கொண்டு இயங்கி வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
x
கேரளாவில் பணத்துக்காக மனைவிகளை கைமாற்றும் கும்பல் இணையத்தில் குரூப் வைத்துக் கொண்டு இயங்கி வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கேரள மாநிலம், கோட்டயம் அருகே உள்ள சங்கனாச்சேரி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது கணவர் மற்ற ஆண்களுடன் உறவில் ஈடுபட தன்னை வற்புறுத்துவதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்திருந்தார். அவர் அளித்த புகார் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன. 

அப்போது தான், கேரளாவில் மனைவிகளை ஒருவருக்கொருவர் கைமாற்றிக் கொள்ளும் கும்பல் இயங்கி வந்த பகீர் தகவல் கிடைத்தது. மெசஞ்சர், டெலிகிராம் உள்ளிட்ட சமூக இணையதளங்கள் மூலமாக குழுக்கள் அமைக்கப்பட்டு இந்த கும்பல் இயங்கி வந்துள்ளது. கப்பிள் மீட் அப் கேரளா என்ற பெயரில் குழுக்களை அமைத்து அதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இருந்து வந்ததும் உறுதியானது. 

அதாவது குழுவில் இணையும் நபர்கள், ஒருவருக்கொருவர் அறிமுகமாகி பின்னர் நேரில் சந்திக்கின்றனர். 

அப்போது மனைவிகளை கைமாற்றிக் கொண்டு உல்லாசத்திலும் அவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். பணத்துக்காக இந்த செயலில் பலர் ஈடுபட்டு வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது... இதன் பின்னணியில், ஒரு மிகப்பெரிய கும்பல் செயல்படுவதாகவும்,  சமூகத்தில் உயர் பொறுப்பில் உள்ளவர்களும் அதில் இருப்பதாகவும் வெளியாகி இருக்கும் தகவல், பகீரை கிளப்பியிருக்கிறது....

ஆலப்புழா, கோட்டயம், கருகச்சால், எர்ணாகுளம் ஆகிய இடங்களில் இருந்து 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த கும்பல் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி போலீசாரையே கிறுகிறுக்க வைத்திருக்கிறது...

அத்துடன் 25க்கும் மேற்பட்டோரை ரகசியமாக போலீசார் கண்காணித்து வருகின்றனர். பொதுவாக வெளிநாடுகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது கேரளாவிலேயே நடந்திருக்கும் இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது...

Next Story

மேலும் செய்திகள்