9 முக்கிய துறைகளில் மொத்த வேலைவாய்ப்பு 3.1 கோடியாக உயர்வு

நாட்டின் 9 முக்கிய துறைகளில் மொத்த வேலைவாய்ப்பு 3.1 கோடியாக உயர்ந்திருப்பதாக, மத்திய தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
x
நாட்டின் 9 முக்கிய துறைகளில் மொத்த வேலைவாய்ப்பு 3.1 கோடியாக உயர்ந்திருப்பதாக, மத்திய தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் புபேந்தர் யாதவ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

அதில் முக்கியமான 9 துறைகளில் மொத்த வேலைவாய்ப்பு 3.1 கோடியாக இருந்ததாக கூறியுள்ளார்.

இரண்டாவது காலாண்டில் குறிப்பிட்ட இந்தத் துறைகளின் மொத்த வேலைவாய்ப்பு, 3.08 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில்,கணிப்பை விட இரண்டு லட்சம் இது அதிகமாகும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

2013-14 ம் காலகட்டங்களில், மேற்குறிப்பிட்ட 9 முக்கிய துறைகளில் மொத்த வேலைவாய்ப்பு 2.37 கோடியாக மட்டுமே இருந்ததாகவும்,

இதில் அதிகபட்சமாக உற்பத்தி துறை 39% பங்களித்த நிலையில், கல்வித்துறை 22 சதவீதம் வேலைவாய்ப்பில் முக்கிய பங்காற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் பிபிஓ துறைகள் சுமார் 10 சதவீதமும் வேலைவாய்ப்பில் முக்கிய பங்காற்றியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

முதலாவது காலாண்டில் பெண் பணியாளர்களின் பங்கு 29.3% ஆக இருந்த நிலையில், இரண்டாவது காலாண்டில் அது 32% ஆக உயர்ந்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்