தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் - வரும் 12ம் தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
பதிவு : ஜனவரி 09, 2022, 06:31 PM
தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் நரேந்திர மோடி வருகிற 12-ம் தேதி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் நரேந்திர மோடி வருகிற 12-ம் தேதி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் உள்ள 37 அரசு மருத்துவ கல்லூரிகளில்  5 ஆயிரத்து 125 இடங்கள் உள்ளன.கடந்த ஆண்டு, நாடு முழுவதும் 75 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கிய நிலையில், தமிழகத்துக்கு 11 மருத்துவ கல்லூரிகள் ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து, மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களான திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் கட்டமைக்கப்பட்டன. இந்த 11 மருத்துவக் கல்லூரிகளையும் தொடங்க சமீபத்தில் இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்தது. இந்நிலையில், புதிய மருத்துவக் கல்லூரிகளை வருகிற 12ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் டெல்லியில் இருந்தபடி தொடங்கி வைக்கிறார். மாலை 4 மணியளவில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில்,  மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் காணொலி காட்சி மூலம் பங்கேற்கின்றனர். முன்னதாக, விருதுநகரில் நடைபெற இருந்த இந்த நிகழ்ச்சியில், பிரதமர் நேரடியாக கலந்துகொள்ள இருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக காணொலி காட்சி மூலம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் மூலம் தமிழகத்திற்கு கூடுதலாக ஆயிரத்து 650 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் கிடைக்கவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

121 views

மீண்டும் மோதும் CSK Vs SRH பழி தீர்க்குமா சென்னை அணி..!

புனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.

89 views

(24/02/2022) ஆயுத எழுத்து - உக்ரைன் போரும் இந்தியாவுக்கான சவால்களும்

(24/02/2022) ஆயுத எழுத்து - உக்ரைன் போரும் இந்தியாவுக்கான சவால்களும்.. சிறப்பு விருந்தினர்களாக - சாய் கிரண், பத்திரிகையாளர் // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் // மதன்குமார், ராணுவம்(ஓய்வு) // ரகுநாதன், பொருளாதார நிபுணர் // மாணவி மௌனி சுகிதா, உக்ரைன்

84 views

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

71 views

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

54 views

பிற செய்திகள்

பல்லக்கில் பவனி வரும் பட்டினப்பிரவேசம் - பக்தர்கள் வெள்ளத்தில் தருமபுர ஆதினம்

பல்லக்கில் பவனி வரும் பட்டினப்பிரவேசம் - பக்தர்கள் வெள்ளத்தில் தருமபுர ஆதினம்

10 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (22-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (22-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

17 views

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (22-05-2022) | Night Headlines | Thanthi TV

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (22-05-2022) | Night Headlines | Thanthi TV

15 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (22-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (22-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

18 views

முதல்வர் ஸ்டாலினுக்கு இலங்கை பிரதமர் நன்றி!

முதல்வர் ஸ்டாலினுக்கு இலங்கை பிரதமர் நன்றி!

12 views

#BREAKING : பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகரிப்பு....

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகரிப்பு....

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.