பூஸ்டர் டோஸ் - வழிகாட்டு முறைகள் வெளியீடு

கடந்த 2021, மே 3 ஆம் தேதிக்குள் 2 தவணை தடுப்பூசி செலுத்திய முன்கள பணியாளர்கள், பூஸ்டர் டோஸ் செலுத்தலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
x
கடந்த 2021, மே 3 ஆம் தேதிக்குள் 2 தவணை தடுப்பூசி செலுத்திய முன்கள பணியாளர்கள், பூஸ்டர் டோஸ் செலுத்தலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 
வரும் 10ஆம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் போடும் பணிகள் தொடங்கப்பட உள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, சுகாதாரப் பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் இணை நோய் பாதிப்பு கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்ளலாம் என்று தெரிவித்துள்ள சுகாதாரத்துறை,

இவர்களில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி 39வது வாரம் அல்லது 9 மாதங்கள் கடந்தவர்கள் பூஸ்டர் டோஸ் பெற தகுதியானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளது. 
எந்தவிதமான சான்றும் இல்லாமல், ஆதார் அட்டையை மட்டுமே பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ள சுகாதாரத்துறை, முதல் இரண்டு தவணைகளில் எந்த தடுப்பூசி செலுத்தப்பட்டதோ, அதே தடுப்பூசி தான் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. 

இந்நிலையில், மே 3ஆம் தேதிக்குள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களின் பட்டியலை சுகாதாரத்துறை தயாரித்துள்ளது. 
அதன்படி, 45 சுகாதார மாவட்டங்களிலும் 2 லட்சத்து 74 ஆயிரம் சுகாதார பணியாளர்கள், 2 லட்சத்து 77 ஆயிரம் முன்கள பணியாளர்கள், 


60 வயதுக்கு மேற்பட்ட 5 லட்சத்து 23 ஆயிரம் பேர் என,மொத்தம் 10 லட்சத்து 75  ஆயிரம் பேர் பூஸ்டர் தடுப்பூசி பெற தகுதியானவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. 

இதனிடையே, தனியார் மருத்துவமனையை சேர்ந்த ஊழியர்களுக்கு, இலவசமாக தடுப்பூசியை செலுத்த, மருத்துவமனை நிர்வாகம் முன் வரவேண்டும் என சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்