5 மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு

5 மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு
5 மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு
x
உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும்  இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  கொரோனா தடுப்பு  நடவடிக்கையாக, ஆன்லைன் மூலம் வேட்பு மனு தாக்கலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் உட்பட 5 மாநிலங்களில் 690 சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் பிப்ரவரி 10-ம் தேதி முதற் கட்ட  வாக்குப்பதிவு தொடங்க உள்ளதாகவும், அங்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார். மார்ச் 7-ம் தேதி இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் கூறியுள்ளார். பஞ்சாப், உத்தரகாண்ட், மற்றும் கோவாவில் ஒரே கட்டமாக பிப்ரவரி 14-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் பிப்ரவரி 27-ம் தேதி மற்றும் மார்ச் 3-ம் தேதி என இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும். 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவு மார்ச் 10-ம் தேதி வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஆன்லைனிலும் வேட்பு மனு தாக்கல் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார். வாக்குச்சாவடிகளை அதிகரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும்,
ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 1200 வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். 5 மாநிலங்களுக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், இன்று முதல் அந்த மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்