பணத்தை முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம்...ஆன்லைன் மோசடியில் ஏமாந்த மக்கள்

தெலங்கானாவில் ஆன்லைன் மோசடியில் லட்சக்கணக்கில் பணத்தை பறிகொடுத்துவிட்டதாக கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர்.
x
தெலங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்திலுள்ள கட்மூர் கிராமத்தை சேர்ந்த சிலருக்கு ஒரு நிறுவனத்தின் பெயரில் வாட்ஸ் அப்பில் லிங்க் ஒன்று வந்துள்ளது. இதனை பதிவிறக்கம் செய்த போது முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என இருக்கவே, அதை நம்பி சிலர் 500 ரூபாய் முதலீடு செய்தனர். அடுத்த நாள் பணம் இரட்டிப்பாக வரவே, இந்த தகவல் அரசல் புரசலாக பரவியது. உடனே இதை நம்பி ஏராளமானோர் லட்சக்கணக்கில் பணம் முதலீடு செய்துள்ளனர். இந்த நிலையில் திடீரென பணம் திரும்ப வராதது கண்டு அதிர்ந்து போன அவர்கள் சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்