சிம் ஸ்வேப் முறையில் மோசடி - திடுக்கிடும் தகவல்கள்

சிம் ஸ்வேப் முறையில் மோசடி செய்த கும்பலை காவலில் எடுத்து விசாரித்து வரும் நிலையில் சிம்கார்டு நிறுவன மண்டல அதிகாரியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
x
சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிம் ஸ்வேப் முறையை பயன்படுத்தி 25 லட்ச ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மேற்கு வங்கத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை 2 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வரும் நிலையில் மோசடி கும்பலின் தலைவன் சதீஷ், உத்தரபிரதேசத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடிக்க தனிப்படை போலீசார் உத்தரபிரதேசம் விரைந்துள்ளனர். கைது செய்யப்பட்ட 4 பேரில் ஒருவருக்கு மட்டுமே இந்த மோசடி குறித்து முற்றிலும் தெரிந்திருந்ததாகவும், மற்றவர்கள் உடந்தையாக மட்டும் இருந்ததும் தெரியவந்தது. இவர்கள் போலியான ஆதார் அட்டைகள் மீட்கப்பட்ட நிலையில் ஆதார் நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதப்பட்டுள்ளது.  மேலும் சிம் கார்டு நிறுவன மண்டல அதிகாரியிடம் திங்கட்கிழமை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்