9 வயதில் காணாமல் போன மகள்.. 22 ஆண்டுகளுக்கு பிறகு தாயுடன் இணைந்த மகள்
பதிவு : ஜனவரி 06, 2022, 04:59 AM
9 வயதில் காணாமல் போன மகள் மீன் வியாபாரியின் உதவியால் 22 ஆண்டுகளுக்கு பிறகு தாயுடன் இணைந்த நெகிழ்ச்சியான சம்பவம் கர்நாடகாவில் நிகழ்ந்துள்ளது.
9 வயதில் காணாமல் போன மகள்.. 22 ஆண்டுகளுக்கு பிறகு தாயுடன் இணைந்த மகள் 9 வயதில் காணாமல் போன மகள் மீன் வியாபாரியின் உதவியால் 22 ஆண்டுகளுக்கு பிறகு தாயுடன் இணைந்த நெகிழ்ச்சியான சம்பவம் கர்நாடகாவில் நிகழ்ந்துள்ளது.தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட காளிமுத்து, சைத்ரா தம்பதி கர்நாடகாவின் சிக்மகளூருவில் காபி தோட்ட வேலை செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு மொத்தம் 5 குழந்தைகள் பிறந்த நிலையில், 5வது குழந்தை அஞ்சலியை, சிக்மகளூருவிற்கு மரம் வெட்டி எடுத்துச் செல்ல வந்த கேரளாவைச் சேர்ந்த யானைப் பாகனின் குடும்பம் யாருக்கும் தெரியாமல் அழைத்துச் சென்றுள்ளது. கேரளா அழைத்துச் செல்லப்பட்ட அஞ்சலி, சிறு சிறு வேலைகளை செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார். அங்கு நீலமணி ஷாஜி என்ற நபரை திருமணம் செய்து கொண்ட அஞ்சலி, கணவரிடம் தனது கதையைக் கூறியுள்ளார். நீலமணியும் தனது மனைவியின் குடும்பத்தைத் தேடுவதில் தீவிரமாக இறங்கியுள்ளார். சிக்மகளூருவைச் சேர்ந்த மீன் வியாபாரி மோனு, கேரளாவில் சென்று மீன் வாங்கி வந்து சிக்மகளூருவில் வியாபாரம் செய்து வந்த நிலையில், நீலமணி, மோனுவிடம் தன் மனைவியின் கதையை விவரித்துள்ளார். மோனுவும் தான் வியாபாரத்திற்கு சென்ற இடங்களில் எல்லாம் அஞ்சலியின் குடும்பத்தாரை குறித்து விசாரிக்கவே, ஒரு வழியாக மூடிகரே பகுதியில் வசித்த சைத்ராவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மோனுவின் மூலம் சைத்ராவின் வீட்டிற்கு அஞ்சலியும் அவரது கணவர் நீலமணியும் வருகை தந்துள்ளனர். 9 வயதில் காணாமல் போன தனது மகளைக் கண்ட பேரானந்தத்தில் தாயும் மகளும் பாசத்தைக் கட்டித் தழுவி பகிர்ந்து கொண்டது அனைவரையும் கண்கலங்கச் செய்தது.

தொடர்புடைய செய்திகள்

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

121 views

மீண்டும் மோதும் CSK Vs SRH பழி தீர்க்குமா சென்னை அணி..!

புனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.

89 views

(24/02/2022) ஆயுத எழுத்து - உக்ரைன் போரும் இந்தியாவுக்கான சவால்களும்

(24/02/2022) ஆயுத எழுத்து - உக்ரைன் போரும் இந்தியாவுக்கான சவால்களும்.. சிறப்பு விருந்தினர்களாக - சாய் கிரண், பத்திரிகையாளர் // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் // மதன்குமார், ராணுவம்(ஓய்வு) // ரகுநாதன், பொருளாதார நிபுணர் // மாணவி மௌனி சுகிதா, உக்ரைன்

83 views

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

71 views

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

52 views

வில் ஸ்மித்திற்கு ஆஸ்கார் 'அடித்து' தந்த படம்... கிங் ரிச்சர்ட் | King Richard | திரைவிமர்சனம் | Movie Review

வில் ஸ்மித்திற்கு ஆஸ்கார் 'அடித்து' தந்த படம்... கிங் ரிச்சர்ட் | King Richard | திரைவிமர்சனம் | Movie Review

21 views

பிற செய்திகள்

தமிழகம் வரும் பிரதமர் மோடி ....ஏற்பாடு பணிகள் தீவிரம்...

26ம் தேதி மாலை 5.10 மணியளவில் ஐதரபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் மீனம்பாக்கம் வரும் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது....

0 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (22.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (22.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

48 views

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்துக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்துக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி...

31 views

இந்தியாவை பாராட்டிய இம்ரான் கான்

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டதை, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பாராட்டியுள்ளார்.

10 views

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.200 மானியம்

பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் பெறும் பயனாளிகளுக்கு இந்த ஆண்டு சிலிண்டர் ஒன்றுக்கு 200 ரூபாய் மானியமாக வழங்கப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

14 views

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (22/05/2022) | Morning Headlines | Thanthi TV

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (22/05/2022) | Morning Headlines | Thanthi TV

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.