20 நிமிடங்கள் மேம்பாலத்தில் காத்திருந்த மோடி ! பாதுகாப்பு குறைபாடு ஏன் ?
பதிவு : ஜனவரி 05, 2022, 07:54 PM
20 நிமிடங்கள் மேம்பாலத்தில் காத்திருந்த மோடி ! பாதுகாப்பு குறைபாடு ஏன் ?
பஞ்சாப்பில் நலத்திட்ட உதவிகளை பிரதமர் மோடி துவக்கி வைக்க சென்றபோது, போராட்டக்காரர்களின் சாலை மறியல் காரணமாக நிகழ்ச்சியில் பங்கேற்காமல் பாதி வழியில் பிரதமர் மோடி திரும்பியுள்ளார். பஞ்சாப் மாநிலம் பொரோஸ்பூர் பகுதியில் பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்க சென்றுள்ளார். அப்போது விமான நிலையத்தில் இருந்து விழா நடைபெறும் அரங்கத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால் மோசமான வானிலை காரணமாக சாலை மார்க்கமாக பயணம் மேற்கொண்டார். அப்போது ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்தின்அருகே உள்ள மேம்பாலத்தை பிரதமரின் வாகனம் சென்று அடைந்தபோது, போராட்டக்காரர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மேம்பாலத்தில் சுமார் 20 நிமிடங்கள் பிரதமர் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனையடுத்து பயணத்தை ரத்து செய்த பிரதமர் பாதிவழியிலேயே விமானநிலையம் திரும்பினார். பிரதமரின் பயணத் திட்டம் பஞ்சாப் மாநில அரசுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தயார் செய்து வைக்காதது தொடர்பாக மாநில அரசு விளக்கம் அளிக்கும் படி மத்திய உள்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் மோதும் CSK Vs SRH பழி தீர்க்குமா சென்னை அணி..!

புனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.

61 views

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

45 views

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

37 views

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

18 views

பிற செய்திகள்

"காலை 7 மணிக்கே பள்ளிகள் திறப்பு?" - கல்வி அமைச்சகம்

"காலை 7 மணிக்கே பள்ளிகள் திறப்பு?" - கல்வி அமைச்சகம்

8 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (11-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (11-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

28 views

வடக்கு டூ தெற்கு டெல்லி வரை... தீவிரமாகும் 'புல்டோசர் அரசியல்'

டெல்லி அரசியல் களத்தில் பூதாகரமாக வெடித்துள்ள புல்டோசர் விவகாரம், தேசிய அளவில் பேசப்பட காரணம் என்ன? என்பதை அலசுகிறது.

66 views

ஐ.நாவில் இந்தியை ஊக்குவிக்க இந்தியா நிதி

ஐ.நா சபையில் இந்தி மொழியை உக்குவிக்க இந்தியா 8 லட்சம் அமெரிக்க டாலர் நிதியை வழங்கியுள்ளது.

35 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (11.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (11.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

57 views

#BREAKING || மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தேசத்துரோக சட்டப்பிரிவை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி. மறுபரிசீலனை செய்யும் வரை எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு...

98 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.