20 நிமிடங்கள் மேம்பாலத்தில் காத்திருந்த மோடி ! பாதுகாப்பு குறைபாடு ஏன் ?
பதிவு : ஜனவரி 05, 2022, 07:54 PM
20 நிமிடங்கள் மேம்பாலத்தில் காத்திருந்த மோடி ! பாதுகாப்பு குறைபாடு ஏன் ?
பஞ்சாப்பில் நலத்திட்ட உதவிகளை பிரதமர் மோடி துவக்கி வைக்க சென்றபோது, போராட்டக்காரர்களின் சாலை மறியல் காரணமாக நிகழ்ச்சியில் பங்கேற்காமல் பாதி வழியில் பிரதமர் மோடி திரும்பியுள்ளார். பஞ்சாப் மாநிலம் பொரோஸ்பூர் பகுதியில் பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்க சென்றுள்ளார். அப்போது விமான நிலையத்தில் இருந்து விழா நடைபெறும் அரங்கத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால் மோசமான வானிலை காரணமாக சாலை மார்க்கமாக பயணம் மேற்கொண்டார். அப்போது ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்தின்அருகே உள்ள மேம்பாலத்தை பிரதமரின் வாகனம் சென்று அடைந்தபோது, போராட்டக்காரர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மேம்பாலத்தில் சுமார் 20 நிமிடங்கள் பிரதமர் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனையடுத்து பயணத்தை ரத்து செய்த பிரதமர் பாதிவழியிலேயே விமானநிலையம் திரும்பினார். பிரதமரின் பயணத் திட்டம் பஞ்சாப் மாநில அரசுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தயார் செய்து வைக்காதது தொடர்பாக மாநில அரசு விளக்கம் அளிக்கும் படி மத்திய உள்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

313 views

கொரோனா தொற்றில் இருந்து குணமான 120 ஆண்களிடம் மருத்துவ ஆய்வு

பெல்ஜியத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமான 120 ஆண்களிடம் மருத்துவ ஆய்வு

138 views

கிணற்றிற்குள் தவறி விழுந்த சிறுத்தை குட்டி - பத்திரமாக மீட்ட வனத்துறையினர்

மகாராஷ்டிர மாநிலம் பூரி பகுதியில் உள்ள விவசாய கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தை குட்டியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

42 views

பிற செய்திகள்

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (05-01-2022)

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (05-01-2022)

30 views

மற்ற மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் என்ன?

நாடு முழுவதும் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் தொற்றைக் கட்டுப்படுத்த ஊரடங்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

14 views

டெல்லியில் ஒரே நாளில் 10,665 பேருக்கு கொரோனா தொற்று

டெல்லியில் ஒரே நாளில் 10,665 பேருக்கு கொரோனா தொற்று

30 views

நான் உயிருடன் விமானம் நிலையம் வரை வந்துவிட்டேன் - பிரதமர் மோடி பரபரப்பு கருத்து

நான் உயிருடன் விமானம் நிலையம் வரை வந்துவிட்டேன் - பிரதமர் மோடி பரபரப்பு கருத்து

36 views

ஒமிக்ரான் - ஒருவர் உயிரிழப்பு

ஒமிக்ரான் - ஒருவர் உயிரிழப்பு

118 views

பயணத்தில் குளறுபடி - பாதியிலேயே திரும்பினார் பிரதமர் மோடி

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் இடத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க வந்த பிரதமர் மோடி, கனமழை காரணமாக நிகழ்ச்சி தொடங்கு முன்பே பாதியிலேயே மீண்டும் திரும்பியுள்ளார்.

146 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.