மற்ற மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் என்ன?

நாடு முழுவதும் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் தொற்றைக் கட்டுப்படுத்த ஊரடங்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
x
நாடு முழுவதும் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் தொற்றைக் கட்டுப்படுத்த ஊரடங்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி கர்நாடகாவில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அத்துடன், அடுத்த 2 வாரங்களுக்கு கடைகள் மற்றும் உள்ளரங்குகள் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மற்றும் பார்வையளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், உத்தரப் பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 14ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதுடன், தனியார் நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் மட்டும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவிலும் உள்ளரங்குகள், திருமண மண்டபங்களில் 50 சதவீதம் பேருடன் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மற்றும் கோவாவிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் பள்ளி,கல்லூரிகள், அழகு நிலையங்கள், திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளதுடன், தனியார் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்