நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், பல்வேறு மாநிலங்கள் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், பல்வேறு மாநிலங்கள் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இதைப் பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
மேற்கு வங்கத்தில் ஜனவரி 3 முதல் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைகழகங்கள், சலூன்கள், பியுட்டி பார்லர்கள், நீச்சல் குளங்கள், மிருகக்காட்சி சாலைகள், தீம் பார்க்குகள் மூடப்படுகின்றன.
உணவு விடுதிகள், பார்கள், திரையரங்குகள், மால்கள், சந்தைகள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன், இரவு 10 வரை இயங்கலாம்.
அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடனும் மெட்ரோ ரயில் சேவைகள் 50% பயணிகளுடனும் இயக்கப்படும்.
டெல்லியில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பள்ளிகள், திரையரங்குகள், ஜிம்கள், உள் அரங்குகள், ஸ்பா, தீம் பார்க்குகள், யோகா மையங்கள் மூடப்பட்டுள்ளன.
உணவு விடுதிகள், பார்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 10 வரை இயங்கும்.
தனியார் அலுவலகங்கள், காலை 9 முதல் மாலை 5 வரை 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கும்.
கடைத் தெருக்கள் மற்றும் ஷாப்பிங் காம்ளெக்ஸ்களில், ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படை எண்கள் கொண்ட கடைகள் ஒரு நாள் விட்டு ஒரு நாள், மாற்றி மாற்றி திறக்க அனுமதிக்கப்படும்.
மகாராஷ்டிராவில் திருமணங்கள், மதம், சமூக, அரசியல் நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 50 பேர் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடற்கரைகள், பொது இடங்களில் கூட்டம் சேர தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஹரியானாவில் திரையரங்குகள், நீச்சல் குளங்கள், விளையாட்டு அரங்குகள் மூடப்பட்டுள்ளன.
அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்குகின்றன.