பணி நியமனம் கோரி ஆசிரியர்கள் அமைதி போராட்டம் - ஆசிரியர்கள் மீது தடியடி நடத்திய போலீசார்

உத்திரபிரதேசத்தில் ஆசிரியர் நியமன தேர்வில் முறைகேடு நடப்பதாக கூறி அமைதி போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிர்யர்களை ஓடவிட்டு போலீசார் தடியடி நடத்திய சம்பவம் பாஜக அரசு மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பணி நியமனம் கோரி ஆசிரியர்கள் அமைதி போராட்டம் - ஆசிரியர்கள் மீது தடியடி நடத்திய போலீசார்
x
உத்திரபிரதேசத்தில் 2019ம் ஆண்டு 69 ஆயிரம் பள்ளி உதவி ஆசிரியர்  பணியிடங்களுக்கு மிகப்பெரிய அளவில் தேர்வு நடத்தியது. இந்த தேர்வின் இட ஒதுக்கீட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் வாய்ப்புகள் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த  இரண்டு ஆண்டுகளாக பணி ஆணை வழங்க கோரிக்கை  விடுத்து வந்த  ஆசிரியர்கள், நேற்று லக்னோவில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த போலீசார், ஆசிரியர்கள் மீது தடியடி நடத்தினர். ஓடிய ஆசிரியர்களை துரத்தி சென்ற போலீசார் தடியாலும், காலாலும் எட்டி உதைத்து தாக்கும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன.  


Next Story

மேலும் செய்திகள்