இந்தியா தடுப்பூசி நிலவரம்

இந்தியாவில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்ட மக்களின் எண்ணிக்கை 50 சதவீதத்தை எட்டியுள்ளது.
x
இந்தியாவில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்ட மக்களின் எண்ணிக்கை 50 சதவீதத்தை எட்டியுள்ளது. 

டிசம்பர்  100 சதவீதம் தடுப்பூசி என்ற இலக்கை நோக்கி, இந்தியாவில் தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், 18 வயதுக்கு மேல் உள்ள நாட்டின் ஜனத்தொகையில் பாதி பேர் இரண்டு டோஸ்களையும் செலுத்தி கொண்டுள்ளனர். 

அதாவது இது ஐரோப்பாவில் 62 சதவீதம் பேரும், வட அமெரிக்காவில் 78 சதவீதம் பேரும் முழு தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கு சமமாகும். 

சனிக்கிழமை நிலவரப்படி, இந்தியாவில் 85.09 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளனர். 

கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் 11 மாதங்களாக இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியானது நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த தொடங்கிய 161 நாட்களுக்கு பிறகே முழு தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 10 சதவீதத்தை அடைந்தது. 

இதுவரை இந்தியாவில் நூற்று 27 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

இருப்பினும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 15 சதவீதம் பேர் இன்னும் ஒரு தவணை தடுப்பூசி கூட செலுத்தி கொள்ளவில்லை என்பது வேதனை தரும் செய்தியாக உள்ளது. 

மேலும், 31 மாநிலங்களில் ஹிம்மாசல், ஜம்மு, கேரளா, உத்தரகாண்ட், குஜராத், மத்திய பிரதேசம், டெல்லி, கர்நாடகா, தெலங்கானா, ஹரியானா மற்றும் அசாம் 11 மாநிலங்களில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்தை தாண்டுகிறது . 

இந்த 11 மாநிலங்களில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 90 சதவீதத்திற்கு மேல். 

ஆனால் பஞ்சாப், ஜார்க்கண்ட், பீகார், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் அசாமை தவிர்த்து வடகிழக்கு மாநிலங்களில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை தேசிய சராசரியை விட குறைவாகவே உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்