இந்தியாவில் முதல்முறையாக பூஸ்டர் டோஸ்க்கு பரிந்துரை

இந்தியாவில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டும் என இந்திய சார்ஸ் கோவிட் மரபணு கூட்டமைப்பு பரிந்துரைத்துள்ளது,
x
இந்தியாவில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டும் என இந்திய சார்ஸ் கோவிட் மரபணு கூட்டமைப்பு பரிந்துரைத்துள்ளது, இந்தியாவில் புதிய ஒமிக்ரான வைரஸ் தொற்று பரவல் ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்றே பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளது. 
இந்தியாவில் இதுவரை பூஸ்டர் தடுப்பூசி குறித்து பெரிதாக பேசப்படாத நிலையில், முதல் முறையாக தற்போதைய நிலை கருத்தில் கொண்டு அரசு அமைப்பே தாமாக முன்வந்து பூஸ்டர் தடுப்பூசியை பரிந்துரைத்துள்ளது. ஒமிக்ரானுக்கு எதிராக தடுப்பூசி முழுமையாக பலன் அளிக்காது என்பதற்கு முழு ஆதாரம் இல்லாத நிலையில், நிச்சயம் நோயின் தீவிர தன்மை குறைக்கப்படும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஏற்கனவே கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அவற்றில் இருந்து கிடைக்கும் எதிர்ப்புசக்தி காலப்போக்கில் குறைந்துவிடுவதால் மீண்டும் கொரோனா தாக்குதலுக்கு ஆளாக நேரிடுவதாக ஆராய்ச்சியில் தெரியவந்திருந்தது. ஏனவே இதனை கருத்தில் கொண்டு பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு இந்திய சார்ஸ் கோவிட் மரபணு கூட்டமைப்பு பரிந்துரைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்