சபரிமலையில் கூடுதல் தளர்வுகள்கேரள அரசு அனுமதிக்குமா?

ஐயப்பன் கோயிலில் கட்டுப்பாடுகளை நீக்கக்கோரி முதல்வர் பினராயி விஜயனுக்கு தேவஸம்போர்டு கடிதம் எழுதியுள்ளது.
x
ஐயப்பன் கோயிலில் கட்டுப்பாடுகளை நீக்கக்கோரி முதல்வர் பினராயி விஜயனுக்கு தேவஸம்போர்டு கடிதம் எழுதியுள்ளது.

சபரிமலையில் பத்கர்கள், தங்குவதற்கு அனுமதிக்க வேண்டும், அவர்களை நெய் அபிஷேகத்துக்கு நேரடியாக  அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை தேவஸம்போர்டு முதல்வருக்கு அனுப்பியுள்ளது. சன்னிதானத்தில், பக்தர்களுக்கு வாடகைக்கு விடுவதற்கு தடை உள்ளதால், தேவஸம்போர்டுக்கு வரவேண்டிய வருவாய் தடையாகியுள்ளதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். கடைகள் முழுமையாக ஏலம் விடப்படவில்லை என்பன உள்ளிட்டவற்றை சுட்டிக் காட்டிய கடிதத்தில், இரு தவணை தடுப்பூசியைப் எடுத்தவர்கள் மற்றும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் பெற்ற அனைவரையும் தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது. நீலிமலை வழியாக பக்தர்களை அனுமதிக்கவும், பம்பையில் நீராட அனுமதிக்க வேண்டும் என்றும் தேவஸம்போர்டு கோரியுள்ளது. இதுகுறித்து அரசின் உயர் அதிகாரிகள் குழு முடிவெடுக்கும் என்றும், கட்டுப்பாடு தளர்வு குறித்து அடுத்த அமைச்சரவை ஆய்வுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்