ஒமிக்ரானை கண்டறிவது எப்படி?

"ஒமிக்ரான்" வகை கொரோனாவை, ஆர்.டி.பி.சி.ஆர் மற்றும் ரேட் பரிசோதனை மூலம் கண்டறிய முடியும் என்று, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.
x
"ஒமிக்ரான்" வகை கொரோனாவை, ஆர்.டி.பி.சி.ஆர் மற்றும் ரேட் பரிசோதனை மூலம் கண்டறிய முடியும் என்று, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். 


"ஒமிக்ரான்"வகை கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை செயலாளர்கள் உடன் அவர், காணொலி வாயிலாக ஆலோசனையில் ஈடுபட்டார். 


அப்போது பேசிய அவர், மாநில அரசுகள் எக்காரணம் கொண்டும், கொரோனா பரிசோதனை, தடுப்பூசி, கொரோனா நோயாளிகளை விரைந்து கண்டறிந்து சிகிச்சை அளிப்பதை குறைக்கக்கூடாது என அறிவுறுத்தினார்.


புதிய  "ஒமிக்ரான்" வகை கொரோனா ஆர்.டி.பி.சி.ஆர் மற்றும் ரேட் பரிசோதனை மூலமாக கண்டறிய முடியும் என்றும், இதனால் அனைத்து மாநில அரசுகளும் கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். 


கொரோனா பரவும் இடங்களை கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை விரைவுப்படுத்தவும்  கேட்டுக்கொண்டார். 


தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட ஆபத்தில் உள்ள நாடுகளிலிருந்து வரும் சர்வதேச பயணிகளின் மாதிரிகளை பரிசோதனை செய்வதில், மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் எனவும், ஆபத்தில் உள்ள நாடுகளைச் சேர்ந்த சர்வதேச பயணிகள், ஆர்.டி.பி.ஆர். சோதனை அறிக்கை கிடைக்கும் வரை, விமான நிலையங்களில் காத்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். 


அதே போன்று விமான நிலையங்கள், துறைமுகங்கள், சர்வதேச எல்லைகளில் கண்காணிப்பு தீவிரமாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்