3 ஆண்டுகளில் இத்தனை விவசாயிகள் தற்கொலையா..? அதிர்ச்சி ரிப்போர்ட்

கடந்த 3 ஆண்டுகளில் 17,299 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.
x
கடந்த 3 ஆண்டுகளில் 17,299 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது. 

குளிர்கால கூட்டத்தொடரில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் விவசாயிகள் தற்கொலை தொடர்பாக எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தனர். 

இதற்கு பதிலளித்துள்ள மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம், கடந்த மூன்று ஆண்டுகளில் 17 ஆயிரத்து 299 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளது. 

மத்திய அரசின் புள்ளிவிபரங்களின்படி, நாடு முழுவதும் கடந்த 2018ம் ஆண்டு ஐயாயிரத்து 763 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதேபோல், 2019ம் ஆண்டில் ஐயாயிரத்து 957 விவசாயிகளும் 2020ம் ஆண்டில் ஐயாயிரத்து 579 விவசாயிகளும் உயிரிழந்துள்ளனர்.  

தமிழகத்தை பொறுத்தவரை 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் தலா 6 விவசாயிகள் உயிரிழந்த நிலையில்,  2020ம் ஆண்டில் 79 விவசாயிகள் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 7 ஆயிரத்து 486 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

பீகார்,கோவா,ஜார்கண்ட்,நாகலாந்து,ஒடிசா,திரிபுரா, உத்தரகாண்ட், மேற்கு வங்கம், டெல்லி, புதுச்சேரி மற்றும் லட்சத் தீவு ஆகிய மாநிலங்களில் கடந்த 3 ஆண்டுகளில் ஒரு விவசாயி கூட தற்கொலை செய்து கொள்ளவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஓராண்டாக போராடி வரும் பஞ்சாப் மாநிலத்தில் 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போ,து 2020ம் ஆண்டு மிகக் குறைவாகவே விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மத்திய அரசு  தெரிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்