"ஒமிக்ரானை எதிர்கொள்ள தயார்" - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

இந்தியாவில் இதுவரை யாருக்கும் ஒமிக்ரான் வகை தொற்று கண்டறியப்படவில்லை என்றும் புதிய உருமாறிய கொரோனாவை எதிர்கொள்ள அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
x
இந்தியாவில் இதுவரை யாருக்கும் ஒமிக்ரான் வகை தொற்று கண்டறியப்படவில்லை என்றும் புதிய உருமாறிய கொரோனாவை எதிர்கொள்ள அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். 

மாநிலங்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் எம்பி ஜி கே வாசன், நாடு முழுவதும் 100 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டி,இதற்காக மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றி வரும் மத்திய அரசுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தார். 

மேலும், பல்வேறு மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக டெங்கு, டைபாய்டு காய்ச்சல் அதிகரிப்பதை சுட்டிக்காட்டி, இதனை கட்டுக்குள் வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என கேட்டு கொண்டார். 

தொடர்ந்து ஒமிக்ரான் வைரஸ் குறித்து அவர் எழுப்பிய கேள்விக்கு மத்திய சுகாதார அமைச்சர் மன்சூக் மாண்டவியா பதிலளித்தார். 

புதிதாக கண்டறியப்பட்டுள்ள வைரஸை எதிர்த்து  போரிட அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொண்டிருப்பதாக தெரிவித்த அவர், நாட்டில் இதுவரை யாருக்கும் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை என கூறினார். 

நாட்டில் இதுவரை 80 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 47 சதவீதம் பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டிருப்பதாக  தெரிவித்த அவர், வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்