உலக அரங்கில் முத்திரை பதிக்கும் இந்தியர்கள்... டுவிட்டரின் சி.இ.ஓ - வெற்றி பயணம்
பதிவு : நவம்பர் 30, 2021, 01:53 PM
டிவிட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரியாக இந்தியாவில் பிறந்தவரான பராக் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். யார் அவர்? விரிவாக பார்க்கலாம்
டிவிட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரியாக இந்தியாவில் பிறந்தவரான பராக் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். யார் அவர்? விரிவாக பார்க்கலாம்

சமூக வலைதளங்களில் முன்னணி தளமான டிவிட்டர் நிறுவனம், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது

இணை நிறுவனராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் 16 ஆண்டு காலம் செயல்பட்டு வந்த ஜாக் டோர்சி, திங்கட்கிழமை அன்று பதவியை ராஜினாமா செய்தார்.

டிவிட்டரில் புதிய சி இ ஓவாக இந்தியரான பராக் அகர்வால் பொறுப்பேற்றதாக ஜாக் டோர்சி தனது டிவிட்டர் பதவில் குறிப்பிட்டார்.

இந்த அறிவிப்பு வெளியான உடனே பராக் அகர்வால் சர்வதேச அளவில் பேசுபொருளானார்

இந்தியாவில் பிறந்தவரான பராக் அகர்வால், மும்பை ஐஐடியில் இளங்கலை பட்டம் முடித்தார்

பள்ளி பருவத்திலேயே துருக்கியில் நடைபெற்ற சர்வதேச இயற்பியல் சார்ந்த போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர்.

அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் முடித்த பராக், 

2011ஆம் ஆண்டில் டிவிட்டர் நிறுவனத்தில் பணியை தொடங்கினார்.

10 ஆண்டுகளில் டிவிட்டர் நிறுவனம் எடுத்த பல முக்கிய முடிவுகளில் பராக்கின் பங்கீடு முக்கியத்துவம் வாய்ந்தது என ஜேக் டோர்ஸ் புகழ்ந்துள்ளார்.

தான் பணியை தொடங்கும்போது 1,000 ஊழியர்கள் மட்டுமே இருந்தனர், 10 ஆண்டுகள் கடந்துவிட்டன. அனைத்தும் நேற்று நடந்தது போன்று உள்ளதாக நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார் பராக்.

டிவிட்டரை நிச்சயம் அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்வதாக அவர் உறுதி அளித்துள்ளார்

டிவிட்டர் சி இ ஓவாக பராக் அகர்வால் பொறுப்பேற்றுள்ளதால், அமெரிக்க முன்னணி நிறுவனங்களில் உயர் பதவிகள் இந்தியர்கள் வசம் சென்றுள்ளது

2015ஆம் ஆண்டு முதல் கூகுள் சி.இ.ஓவாக சுந்தர் பிச்சையும்,

2014 ஆம் ஆண்டு முதல் மைக்ரோசாஃப்ட் சி இ ஓவாக சத்யா நாதெல்லாவும்,

2020 ஆம் ஆண்டு முதல் ஐபிஎம் நிறுவன சி இ ஓவாக அரவிந்த் கிருஷ்ணாவும்,
 
2007ஆம் ஆண்டு முதல் Adobe நிறுவன சி இ ஓவாக சாந்தணு நாராயணும்,

கடந்த ஏப்ரல் முதல் VMWare நிறுவன சி இ ஓவாக ரகு ரகுராமனும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.